அமெரிக்க குடியுரிமை ரத்து தொடர்பில்
தெளிவுபடுத்திய கோட்டா!



தான் உரிய விதிமுறைகளுக்கு அமைய அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்துக் கொண்டுள்ளதாகவும் அது தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அத தெரண 360 அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தனக்கு அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்துக் கொள்ள தேவை இருந்ததாக தெரிவித்த அவர், அது தொடர்பில் தான் அமெரிக்க தூதரகத்திற்கு சென்று தெரிவித்ததாக கூறினார்.

அதன் பின்னர், அவர்கள் தனது அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்து சான்றிதழ் ஒன்றை வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி, ஏப்ரல் 17 ஆம் திகதியில் இருந்து தான் அமெரிக்க குடிமகன் இல்லை என கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

மேலும், தனக்கு தெரிந்த அளவில் இலங்கையில் உள்ள அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்துக் கொண்ட சிலருக்கு சுமார் ஒன்றரை வருத்திற்கு பின்னரே குறித்த கடிதம் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், அண்மையில் வௌியான பெயர் பட்டியில் தனது பெயர் உள்ளடக்கப்படாமைக்கும் குடியுரிமை ரத்துச் செய்யப்பட்டுள்ளமைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஸ அமெரிக்க குடிமகனாக இருந்த போது அந்நாட்டில் பெற்றுக் கொண்ட வௌிநாட்டு கடவுச் சீட்டை ஊடகங்களுக்கு காண்பித்த அவர், அது 2022 ஆம் ஆண்டு வரை செல்லுபடியாவதாக தெரிவித்தார்.

தான் குடியுரிமையை ரத்துச் செய்துக் கொண்ட காரணத்தால் குறித்த கடவுச் சீட்டும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், தான் தற்போது இலங்கை குடிமகன் என அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top