விரக்தியின் உச்சிக்கே வந்த
மசாஹிமா குடும்பத்திற்கு
உதவிய அமைசர் ரிஷாத்
மஹியங்கனை
ஹசலக பொலிசாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சகோதரி
மசாஹிமாவின் விடுதலையின் பின் நூற்றுக்கணக்கான
உள்நாட்டு வெளிநாட்டு
தனவந்தர்கள் மசாஹிமாவின் குடும்பத்திற்கு
call பண்ணி அவர்களுக்கான வீட்டுத்தேவையை
பூர்த்தி செய்வதாக
வாக்குறுதிகளை அளித்திருந்தனர்.
வாக்குறுதியளித்தவர்களில்
ஸதகா பவுண்டேஷனால்
வழங்கப்பட்ட உதவியினால் வீட்டின் அரைவாசி வேலையை
மசாஹிமா குடும்பம்
முடித்துள்ளனர்.
வாக்குறுதிகளை
நம்பி ஆரம்பித்த
வீட்டு வேலைகளை
முடித்துக்கொள்ள முடியாமல் மழையில் நனைந்து விரக்தியின்
உச்சிக்கே வந்த
மசாஹிமா குடும்பம்
நீதிமன்ற வளாகத்தில்
கண்கலங்கி நின்றது.
“எமது
சமூகம் கண்கலங்குவது”
எமக்கு பிடிக்காத
விடயமென்பதால் எவரிடம் கேட்டால் உடனடி தீர்வு
கிடைக்கும் என்பது எமக்கு தெளிவிருந்தமையால் அமைச்சர் ரிஷாத்திற்கு தொலைபேசி மூலம்
விபரங்களை கூறிய
போது உடனடியாக
ரூ.200,000/ வை எனது வங்கிக்கணக்கிற்கு அனுப்பி அப்பணம் உடனடியாக என்னால்
மசாஹிமாவிடம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
! சற்றும் எதிர்ப்பாக்காமல்
கிடைத்த உதவியை
ஆனந்தக்கண்ணீருடன் பெற்றுக்கொண்ட மசாஹிமா
குடும்பம் எமக்காகவும்
அமைச்சர் ரிஷாத்திற்காகவும் துஆ செய்தது.
வாக்குறுதிகளை
அள்ளி வழங்குபவர்கள்
அல்லாஹ்வுக்கு
பயந்துக்கொள்ளுங்கள்.
தகவல் சட்டத்தரணி
சறூக் –கொழும்பு
0 comments:
Post a Comment