கோத்தபாயவிற்கு ஏற்கட்டுள்ள நெருக்கடி!
தேர்தலில் வெற்றிபெற்றாலும்
பதவியிலிருந்து நீக்கப்படுவாரா?
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றிபெற்றாலும், அவரது இரட்டைக் குடியுரிமை காரணமாக பதவியிலிருந்து நீக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறியுள்ளார். அமைச்சர் சம்பிக்க ரணவக்க, நேற்று பகல் மல்வத்துப்பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கல தேரரை சந்தித்து ஆசிபெற்றார்.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
“இந்த நாட்டை அமெரிக்கப் பிரஜைக்கு வழங்குவதே மிகப்பெரிய ஆபத்தாகும். கோத்தபாய ராஜபக்ச இன்னும் தனது அமெரிக்கக் குடியுரிமையை இரத்துசெய்யவில்லை.
அவர் உள்விவகார அமைச்சு ஊடாக குடியுரிமையை பெற்றுக்கொண்டமைக்கான ஆவணங்களும் இல்லை.
ஆகவே அமெரிக்கப் பிரஜை ஒருவரை இந்தநாட்டில் ஜனாதிபதியாக தெரிவுசெய்தால், ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி காணிகளை பகிரந்தளிக்க முடியும்.
அப்படியான ஆபத்தான நிலையை நாங்கள் அனுமதித்திடக்கூடாது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தேர்தலில் வெற்றிபெற்றாலும் அவரது இரட்டை குடியுரிமை காரணமாக அவரது பதவி பறிக்கப்பட்டது.
ஆகவே கோத்தபாய ராஜபக்சவிற்கும் அப்படியான நிலைமை ஏற்படலாம்” அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான நாள் மிகவும் அண்மித்துள்ள நிலையில், கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை விவகாரம் கொழும்பு அரசியலில் பேசும் விடயமாக மாறியுள்ளது.
இதனால் கோத்தபாய ராஜபக்ச தரப்பினர்கள் கடும் நெருக்கடிகளை சந்தித்துள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment