அமெரிக்காவின்
பட்டியலில்
கோத்தாவின்
பெயர் இல்லை
.– வெடித்தது
சர்ச்சை
அமெரிக்க குடியுரிமையை கைவிட்டவர்களின் பெயர்களை உள்ளடக்கிய
– இந்த ஆண்டின் மூன்றாவது
காலாண்டுக்குரிய பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், அதில் கோத்தாபய ராஜபக்சவின் பெயர்
இடம்பெறவில்லை.
அமெரிக்க குடியுரிமையைத் துறந்த 183 பேரின் பட்டியல் அடங்கிய அறிவிப்பை அமெரிக்க
பதிவாளர் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
திறைசேரியின் உள்நாட்டு வருவாய் சேவையின் சார்பில், பதிவாளர் திணைக்களத்தினால் இந்த பட்டியல்
வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில், அமெரிக்க குடியுரிமையை துறந்து
விட்டதாக அறிவித்து, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், கோத்தாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெறவில்லை.
கடந்த மே 3 ஆம் திகதி அமெரிக்க குடியுரிமையை துறந்து
விட்டதாக கோத்தாபய ராஜபக்ச அறிவித்திருந்தார்.
எனினும், இந்த ஆண்டில் ஜனவரி தொடக்கம் ஒக்ரோபர் 30ஆம் திகதியை உள்ளடக்கியதாக, வெளியிடப்பட்டுள்ள மூன்று பட்டியல்களிலும்
அவரது பெயர் இடம்பெறவில்லை.
இதனால் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையைத்
துறக்கவில்லை என்று குற்றச்சாட்டு வலுப்பெற்றுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் 6 நாட்களே உள்ள நிலையில், கோத்தாபய ராஜபக்சவுக்கு இந்த பட்டியல் கடும்
நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment