சுதந்திர தின ஞாபகார்த்த ஆயிரம் ரூபா நாணயத்தாள்

06.02.2018 ஆம் திகதியிலிருந்து உரிமம் பெற்ற

வர்த்தக வங்கிகளினூடாக சுற்றோட்டத்திற்கு விடப்படும்

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினவைபவத்தை முன்னிட்டு, புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் ஒன்றை இலங்கை மத்திய வெளியிடப்பட்டுள்ளது.
நான்கு மதங்களின் வழிபாட்டுத் தளங்களும் இந்த ஆயிரம் ரூபா நாணயத்தாளில் பொறிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், நான்கு இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் உருவங்களும் புதிய ஆயிரம் ரூபாய் நாணயத்தாளில் பொறிக்கப்பட்டுள்ளன.
5 மில்லியன் எண்ணிக்கை கொண்ட நாணயத் தாள்கள் இவ்வாறு ; வெளியிடப்படவுள்ளதுடன்  நாணயத் தாளின்தொடர் இலக்கம் ளு70Æ1 000001 – ளு70Æ5 1000000 ஆக இருக்கும். தாளின் திகதி 2018.02.04 ஆகும்.
இந்நாணயத் தாள் இலங்கையில் எந்தவொரு தொகைக்குமான கொடுப்பனவிற்கும் சட்டரீதியான நாணயமாக இருக்கும் என்பதுடன் இது  சுற்றோட்டத்திலிருக்கும்   பொழுது மத்திய வங்கியின் பொறுப்பாகவும் இருக்கும்.
நாணயத்தாள் உத்தியோக பூர்வமாக மத்திய வங்கியின்ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியினால் நிதி அமைச்சர் திரு. மங்கள சமரவீரவிடம் நேற்று (2018.01.30) உத்தியோகப்பூர்வமாக வழங்கப்பட்டது.
ஞாபகார்த்த நாணயத்தாள் 06.02.2018 இலிருந்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினூடாக சுற்றோட்டத்திற்கு விடப்படவுள்ளது. அதேநேரம் ஆரம்பத் தொடர் இலக்கங்களுடன் கூடிய மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான நாணயத் தாள்கள் கவர்ச்சிகரமான மடிப்பொன்றில் வைக்கப்பட்டு ஒவ்வொன்றும் ரூ.1,300 இற்கு வழங்கப்படும்

இல.54, சதம் வீதி, கொழும்பு 01 இல் அமைந்துள்ள பொருளாதார வரலாற்று அரும்பொருட்காட்சிச்சாலையிலும் மத்திய வங்கியின் அநுராதபுரம், மாத்தறை, மாத்தளை, திருகோணமலை மற்றும ; கிளிநொச்சி பிரதேச அலுவலகங்களிலும் இந்த நாணயத் தாள்கள்  விற்பனை செய்யப்படும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

1000 ரூபாய் புதிய நாணயத் தாளில் சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் படம் அச்சிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டிலுள்ள நான்கு பள்ளிவாசல்களின் படங்கள்  துருப்புச் சீட்டு போடப்பட்டதில் சாய்ந்தமருது பள்ளிவாசலின் படம் இடம்பிடித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது
1.பேருவளை
 2.மூதூர்
3. சாய்ந்தமருது
4.புத்தளம்.





Add caption


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top