அட்டாளைச்சேனை
தேசியப் பட்டியல் விவகாரம்.
கட்சியின்
ஸ்தாபகச் செயலாளரின்
இரண்டு
வேண்டுகோளில்
ஒன்றே நிறைவேறியது!
முஸ்லிம் காங்கிரஸ் மூலம் வழங்கப்படவிருக்கின்ற தேசிய பட்டியல்
எம்.பி தொடர்பாக மக்காவுக்கு புனித உம்ரா கடமையை நிறைவேற்றச் செல்லும் நீங்கள் எல்லாத் 'தூஆ' க்களுடனும் தவறாது சேர்த்து
புனித கஃபத்துல்லாவில் வைத்து இறைவனிடம் வேண்டிக்கொள்ளுமாறு கடந்த 3.9.2017ல் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும்
அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களிடம் அக்கட்சியின் ஸ்தாபகச் செயலாளரும் சிரேஷ்ட
சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் கேட்டுக்கொண்ட இரண்டு கோரிக்கைகளில் ஒன்றே
நிறைவேறியுள்ளதாக மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 3.9.2017ல் மக்காவுக்கு புனித உம்ரா கடமையை நிறைவேற்றச்
சென்ற முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்
அவர்களின் கொழும்பு இல்லத்திற்கு அக்கட்சியின் ஸ்தாபகச் செயலாளரும் சிரேஷ்ட
சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் சென்று தலைவரிடம் 'சலாம்' சொல்லிவிட்டு வழியனுப்ப வந்த வேளையில்,
இக்கட்சி மூலம் வழங்கப்படவிருக்கின்ற தேசிய பட்டியல் எம்.பி
க்கான நியமனத்தை முதலில் அட்டாளைச்சேனைக்கும் பின்பு தனக்கும் அது கிடைக்க
வேண்டும் என எல்லாத் 'தூஆ' களுடனும் இதனையும் தவறாது சேர்த்து புனித
கஃபத்துல்லாவில் வைத்து எனக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்
எனவும்
தலைவர் ஹக்கீம் அவர்கள் சிரித்துக் கொண்டு கபூர் அவர்களின்
தோழில் தட்டி 'டோன்ற் வொறி'
( கவலைப்படாதே) எல்லாம்
இறைவன் நாட்டப்படி நடக்கும் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்களின் அன்றைய வேண்டுகோளில்
ஒன்று நிறைவேறியுள்ளதாகவும் மற்றைய வேண்டுகோள் ஏ.எல்.எம். நஸீருக்கு
வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் நிறைவேறவில்லை எனவும் மக்கள்
தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment