கிழக்குமாகாண மக்களிடம் மன்னிப்பு கோரினார்
தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன்..!
எனது பதிவில் கிழக்கு மாகாண மக்களுக்கு மனம் பாதிக்கப்பட்டிருந்தால் நான்
மன்னிப்புக்கேட்கின்றேன். என முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் மற்றும், நீர் வழங்கல் அதிகார சபையின் பிரதித் தலைவர் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ள சபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மு.காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இதனை அரசியலாக மாற்றவேண்டாம். என்னோடு முகநூலில் விவாதித்த நபருக்கு மட்டும் தான் அந்தக்
கருத்தை நான் பதிவிட்டேன். என்னுடைய கிழக்கு மக்களுக்கு அப்படி நான் சொல்லவில்லை.
கிழக்கு மாகாணத்தில் அதிகமான நண்பர்கள் எனக்கு உண்டு. அவர்களை நான் தாக்கிப்
பேசியதும் இல்லை .குறை கூறியதும் இல்லை. எனது இந்தக் கருத்துக்கள் என்னோடு
விவாதித்தவருக்கு மாத்திரமே கிழக்கு மாகாண மக்களுக்கு அல்ல என அவர்
தெரிவித்துள்ளார்.
“நாங்கள் தலைமை தாங்குகின்றவர்கள், நீங்கள் எப்போதும் தலைமை பின்னால் வருகின்றவர்கள்”
“கிழக்கு மாகாணத்தவர்கள் சந்தர்ப்பவாதிகள். அரசியல் செல்வாக்குடன் தொழில்களை பிச்சையாகக் கேட்டு அலைபவர்கள்”.
“கிழக்கு மாகாணத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்கள் வாசல் படிக்கட்டில் கிழக்கு மாகாணத்தவர்கள் வந்து கிடப்பீர்கள். சுனாமி காலத்தில் நாங்கள்தான் உங்களுக்கு உதவினோம்”.
“உங்களுக்கு நல்ல தலைவா் இருந்தால் ஏன் எமக்குப் பின்னால் நிற்கின்றீர்கள்”
“நாம் ஆள்பவா்கள், கிழக்கானுகள் ஆளப்படுபவன்கள்”……
0 comments:
Post a Comment