இலங்கையின் 70ஆவது தேசிய சுதந்திர தின விழாவின்
சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக
இளவரசர் எட்வர்ட் இலங்கை விஜயம்
இலங்கையின் 70ஆவது தேசிய சுதந்திர தின விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக பிரிட்டன் அரச குடும்பத்தைச்சேர்ந்த இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசியும் இன்று கொழும்பை வந்தடைந்தனர்.
பிற்பகல் 12.30 மணியளவில் இலங்கை வந்தடைந்த இவகள்ர்கள் ஜந்து நாட்களுக்கு இங்கு தங்கியிருப்பார்கள். இக்காலப்பகுதியில் இவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.
எட்வர்ட், பிரித்தானியாவின் இரண்டாவது எலிஸபெத் மகாராணி மற்றும் எடின்பரோ ஆகியோரின் இரண்டாவது புதல்வராவார்.
1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் உறுப்பினராக இணைந்துக்கொண்ட பொதுநலவாய நாடுகள் அமைப்பை ஆரம்பித்தவர் எலிஸபெத் மகாராணியாவார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.