2017 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர
உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த
ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய அங்கத்தவர்களின்
பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்
2017 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய அங்கத்தவர்களின் பிள்ளைகள் 5000 பேருக்கு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.
ஓவ்வொருவருக்கும் 12ஆயிரம் ரூபா வீதம் புலமைப்பரிசிலாக வழங்க ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சபை தீர்மானித்துள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் மார்ச் 16 ஆம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
பூரணமற்ற மற்றும் இறுதித் திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுகொள்ளப்படமாட்டாது என்று ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சபை அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களை
www.etfb.lk இணையத்தளத்தின் ஊடாகவும் தரவிறக்கம் செய்ய முடியும். அத்தோடு ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் பிராந்திய அலுவலகங்களிலும் பெற்றுகொள்ளலாம்.
இது குறித்த மேலதிக தகவல்களுக்கு 011-2369685 ,011-2369313 , 011-2368162 என்னும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் என்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.