விடியலின் தத்துவம்
++++++++++++++++++
புற்களில் ஊஞ்சலாடும் பனித்துளிகள்
பரமனின்
புகழ்பாடி மகிழ்கின்றன.
இயற்கையின் இனிய
தாலாட்டில்
புற்கள் தூங்கும்
நிலையைக் கண்டு
முகிழ்விடும் இள
விடியல் சிரிக்கிறது.
கூதலின்
குறும்பில் கும்மாளமிடும்
பனித்துளிகளின்
மகிழ்வில்
விழிப்புற்று
சூரியன் சோம்பல் முறிக்கின்றான்.
சோம்பலைத்
துரத்தி எழும்பிய பகலவன்
ஒழித்து நிற்கும்
விடியலைத் துரத்துகிறான்.
பகலவனின்
ஆவேசத்தில் பயந்த விடியல்
இருந்த இடம்
தெரியாமல் ஓடுகிறது.
வேதனையில்
விம்பிக் கொண்டிருந்த
சின்னப்
புற்களெல்லாம் நிமிர்ந்து
இறைவனைச்
சிரம்தாழ்த்தி துதிக்கின்றன.
இயற்கையின்
தத்துவதைப் பார்த்து
விடியல் ஈசனைப்
புகழ்கிறது.
ஆண்டவன் வாழ்வின்
தத்துவமாகி
அண்டத்தை
பார்த்துக் கொண்டிருக்கிறான்.
- எஸ்.
முத்துமீரான்
0 comments:
Post a Comment