மஹிந்தவின் குடியுரிமையைப் பாதுகாக்க முயற்சி
–பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க
குடியியல் உரிமைகளை முடிந்தால் பறிக்கட்டும்
– பீரிஸ் சவால்
மஹிந்த ராஜபக்ஸவை குடியுரிமை
இழப்பில் இருந்து
காப்பாற்ற சிறிலங்கா
சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர் முயற்சிப்பதாக,
பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மொரவக்கவில்
நடந்த கூட்டம்
ஒன்றில் உரையாற்றிய
பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க,
“ மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் நடந்த மோசடிகள், ஊழல்கள், அதிகார
மீறல்கள், குறித்து
விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி
அறிக்கையில், மஹிந்த ராஜபக்ஸவின் குடியுரிமையை
பறிக்கப் பரிந்துரை
செய்யப்பட்டுள்ளது.
அந்தப்
பரிந்துரை, ஏழு ஆண்டுகளுக்கல்ல, வாழ் நாள்
முழுவதும் அவரது
குடியுரிமையைப் பறிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை நாடாளுமன்றம்
தான் முடிவு
செய்ய வேண்டும். இந்த நிலையில்
சிலர் சிறிலங்கா
சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு அழைப்பு
விடுக்கிறார்கள்.
மஹிந்த ராஜபக்ஸவின் குடியியல்
உரிமை பறிக்கப்படும்
விவகாரத்துக்கு தீர்வு காண அவர்கள் முனைகிறார்கள்
என்று நினைக்கிறேன்.”
என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ஸாவின் குடியியல் உரிமைகளை, அரசாங்கம் முடிந்தால் ரத்துச் செய்து பார்க்கட்டும் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சவால் விடுத்துள்ளார்.
”தேர்தலில் தாம் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில், சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகளை, முன்னாள்ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன பறித்தார். தன்னைவிடப் பிரபலமானவராக சிறிமாவோ பண்டாரநாயக்க இருப்பதாக உணர்ந்து கொண்டதால் தான், ஜே.ஆர்.அவரை வெட்டி விட்டார்.
ஒட்டுமொத்த நாடுமே இன்று மஹிந்த ராஜபக்ஸவின் தலைமைத்துவத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அவர் அரசியல் ரீதியாக அச்சுறுத்தப்பட்டால் மக்கள் எப்படி பதிலளிப்பார்கள் என்பதை நாம் பார்க்கலாம். அவரது குடியியல் உரிமைகளைப் பறித்தால் அதன் விளைவுகளை எல்லோரும் பார்க்க முடியும்.” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
0 comments:
Post a Comment