இது
சரியாக ஒரு வருடத்திற்கு முன்
கல்முனை மற்றும் சம்மாந்துறை பகுதிகளுக்கான
அபிவிருத்தி கலந்துரையாடல் இடம்பெற்று
கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு என
அறிவிக்கப்படுகின்றதே தவிர
அபிவிருத்தி வேலைகள் இடம்பெறுவதாக இல்லை
மக்கள் விசனம்
மாவடிப்பள்ளி - துறைநீலாவணை வரையான வீதியை அமைப்பதற்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் திகதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற கூடத்தில் தீர்மானிக்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஒரு வழிப்பாதையாக அமைக்கப்படும் இவ்வீதி கரைவாகு வட்டை, இறைவெளி கண்டம் ஊடாக நற்பிட்டிமுனை தமிழ் பகுதியை ஊடறுத்து துரைவேந்திர மேடு ஊடாக பெரிய நீலாவணையை வந்தடையும் என்றும்
தெரிவிக்கப்பட்டது.
கல்முனை மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் எனத் தெரிவித்து அன்று
கொழும்பில் கூடிய கூட்டம் இடம்பெற்று இன்று சரியாக ஒரு வருடமாகியும் அதற்கான
வேலைகளோ மாவடிப்பள்ளி - துறைநீலாவணை வரையான வீதியை அமைப்பதற்கான வேலைகளோ எதுவும் இடம்பெறவில்லை என மக்களால்
தெரிவிக்கப்படுகின்றது.
முஸ்லிம் காங்கிரஸுக்கு வீழ்ச்சி
ஏற்படும் காலங்களில்தான் அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக கல்முனை, பொத்துவில் , மற்றும் சம்மாந்துறை பகுதிகளுக்கான அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் எனக்கூறி
கல்முனையிலும் சம்மாந்துறையிலும் கொழும்பிலும் கூட்டங்கள் நடாத்தி அபிவிருத்திக்கு கோடிக்கணக்கான நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும்
வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கின்றார்களா என்றும் மக்கள் சந்தேகம்
தெரிவிக்கின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி ஹஸனலி
கட்சியின் தலைமைத்துவத்தோடு முரண்பட்டிருந்த காலத்தில்தான் கல்முனை மற்றும் சம்மாந்துறை
பகுதிக்கான இந்த அபிவிருத்தி குறித்த கூட்டம் (2017.01.23) கொழும்பில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றதாகவும்
மக்களால் சுட்டிக் காட்டப்படுகின்றது.
இக்கூட்டம் இடம்பெற்று இன்று சரியாக ஒரு வருடங்கள் ஓடிவிட்டன.
ஆனால், மாவடிப்பள்ளி - துறைநீலாவணை வரையான வீதியோ அல்லது கல்முனை
மற்றும் சம்மாந்துறை பகுதிகளில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய எந்த அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் இடம்பெறுவதாகத்
தெரியவில்லை.
கல்முனை
மற்றும் சம்மாந்துறை
பிரதேசங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பான திட்டமிடலை
மேற்கொள்வதற்காக நகர திட்டமிடல் அமைச்சுக்கு 2017ஆம்
ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில்
200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு. இதனை பயன்படுத்தி
கல்முனை மற்றும்
சம்மாந்துறை ஒருங்கிணைந்த பெருநகர அபிவிருத்தி தொடர்பான
கருத்திட்டங்களை மேல் மாகாண மற்றும் நகர
அபிவிருத்தி அமைச்சிடம் ஒப்படைப்பதற்கு அக்கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுமாத்திரமல்லாமல், கல்முனை மற்றும் சம்மாந்துறை பாரிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி திட்டத்துக்குள் உள்ளடங்கும் முக்கியமான அணைக்கட்டு பாதையை செப்பனிட்டு நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அக்கூட்டத்தில்
தெரிவிக்கப்பட்டது.
அபிவிருத்தி திட்டம் உள்ளடங்கும் பிரதேசத்தில் புகையிர பாதை அமைக்கப்படும் பட்சத்தில், அதனையும் கருத்திற்கொண்டு அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் பெரிய நீலாவணை தொடக்கம் காரைதீவு வரையான கடற்கரை வீதியை செப்பனிடுவதற்கும், கடற்கரை பிரதேசத்தில் பீச் பார்க் அமைப்பதற்கும் ஆலோசனை முன்வைக்கப்பட்டது.
கல்முனை
மற்றும் சம்மாந்துறை
ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தி திட்டம்
தொடர்பான பணிகளை
துரிதப்படுத்துமாறு முஸ்லிம் காங்கிரஸ்
தலைவரும் அமைச்சருமான
ரவூப் ஹக்கீம் ஒரு வருடங்களுக்கு முன்
இடம்பெற்ற அக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட
அதிகாரிகளுக்கு பணிப்புரையும் விடுத்திருந்தார். அவரால்
வழங்கப்பட்ட பணிப்புரைகளுக்கும் என்ன நடந்துவிட்டது எனத் தெரியவில்லை.
அமைச்சர் வழங்கும் வாக்குறுதிகள் போல் அதிகாரிகளுக்கு அவரால் வழங்கப்படும் பணிப்புரைகளும் காற்றில் கலந்து விடுகின்றதா என இப்பிரதேச மக்களால் கேள்வி எழுப்பப்படுகின்றது.
அன்று (2017.01.23) இக்கூட்டத்தில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.
ஹரீஸ், பாராளுமன்ற
உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், முன்னாள் கிழக்கு மாகாணசபை
உறுப்பினர்களான கே.எம். அப்துல் றஸாக்
(ஜவாத்), ஐ.எல்.எம்.
மாஹிர், கல்முனை
மாநகர முன்னாள்
முதல்வர் நிஸாம்
காரியப்பர், கல்முனை மாநகர முன்னாள் உறுப்பினர்களான
எம்.எஸ்.
உமர் அலி,
ஏ.எல்.எம். முஸ்தபா,
எம்.ஐ.
முஹம்மத் பிர்தௌஸ்,அமைச்சரின் இணைப்புச்செயலாளரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய
பிரதி ஒருங்கிணைப்புச்
செயலாளருமான ரஹ்மத் மன்சூர், மு.கா. அம்பாறை மாவட்ட
பொருளாளர் ஏ.சி. யஹியாகான்,
அமைச்சின் செயலாளர்
என்.டி.
ஹெட்டியாராச்சி, மேலதிக செயலாளர் எம். முயினுத்தீன்,
மேல் மாகாண,
பெருநகர அபிவிருத்தி
அமைச்சு மற்றும்
காணி மீள்நிரப்பு
அபிவிருத்தி கூட்டுத்தாபன அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண் டிருந்தனர்.
ஏ.எல்.ஜுனைதீன்
0 comments:
Post a Comment