முஸ்லிம்கள் எவரையும்
மாவட்ட அரச அதிபர்களாக நியமிக்க மாட்டார்களா?
முஸ்லிம் மக்கள் ஆவல்!
இலங்கையில் எந்த ஒரு மாவட்டத்திலும் முஸ்லிம் ஒருவரை மாவட்ட அரச அதிபராக நியமிப்பதற்கு இந்த நல்லாட்சி
நடவடிக்கை எடுக்காதிருப்பது குறித்து முஸ்லிம் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் சிங்கள சகோதரர்களும் 4 மாவட்டங்களில்
தமிழ் சகோதரர்களும் மாவட்ட அரசாங்க அதிபர்களாகக் கடமையற்றி வருகின்றனர். ஆனால் ஒரு மாவட்டத்திலாவது முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்
நியமிக்கப்படவில்லை.
அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம்
திகதி வெளியிடப்பட்ட 368 பேர் கொண்ட விசேட தரத்திலுள்ள இலங்கை நிர்வாக சேவையினரின் மூப்புரிமைப் பட்டியலில் 18 முஸ்லிம்கள்
இருந்து கொண்டிருக்கிறார்கள்.
மூப்புரிமை அடிப்படையில் இவர்களுக்கு பின்னுள்ளவர்களும் மாவட்ட அரசாங்க
அதிபர்களாக பதவி வகித்துக்கொண்டிருக்கும் நிலையில் இவர்கள்
புறந்தள்ளப்பட்டிருப்பது ஏன் என்ற கேள்வியை முஸ்லிம்கள் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
உண்மையில் இன விகிதாசாரத்தைக் கடைப்பிடிப்பதாக இருந்தால் கூட ஆகக் குறைந்தது
இரண்டு முஸ்லிம்களுக்கு மாவட்ட அரச அதிபர் நியமனம் வழங்கப்படல் வேண்டும் எனத்
தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நியமனம் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படுகின்ற ஒரு நியமனமாக
இருந்திருக்குமேயானால் எமது உரிமைகளுக்காகப் போராடுவதாகக் கூறும் அரசியல்வாதிகள் மக்களை வீதிக்கு அழைத்து போராட்டங்களை நடத்தியும்
ஆட்சியாளர்களிடம் அடிக்கடி சென்று கதைத்தும்
எப்போதே பெற்றிருப்பார்கள். இது அரசியல்வாதிகளால் வகிக்கும் பதவி இல்லையே அதனால் இது
விடயத்தில் அவர்கள் அக்கறையின்றி இருந்து கொண்டிருக்கிறாகள் என விடயம் தெரிந்த மக்கள்
கூறுகின்றனர்.
தமிழ் சகோதரர்கள் சார்பில் அவர்கள் அமைச்சுப் பதவிகள் எதையும் பெறாமலேயே எதுவித ஆர்ப்பாட்டமுமின்றி நிர்வாக ரீதியாக சரியாகவும் கச்சிதமாகவும் தமது தேவைகளை படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டு வருகின்றார்கள். ஆனால், எமது முஸ்லிம் தலைவர்கள் இது விடயத்தில் எதுவித அக்கறையும் காட்டுவதாக இல்லை என மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
வட மாகாண சபையின் பிரதம செயலாளராக கடமையாற்றிய ஒருவரை நீக்குமாறு கடந்த அரசாங்க காலத்தில் கோரிய போதும் அது நிறைவேறாத நிலையில் அவர்களின் கோரிக்கை இந்த அரசாங்கத்தில் அமைதியாக நிறைவேற்றப்பட்டுள்ளது (மூப்புரிமை இலக்கம் 227 ஆ.பதிநாதன் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மொனராகலை மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்தவர்)
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் கூட தமிழ் சகோதரர்கள் விரும்பியது போன்று படைத் தரப்பினர் அல்லாமல் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதுமாத்திரமல்லாமல் 4 மாவட்டங்களில் 4 தமிழ் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அண்மையில் கூட மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர்
நியமனத்திலும் தமிழ் மொழி பேசும் ஒருவரை நியமிப்பதில் வெற்றி கண்டார்கள்.
இதோ தமிழ் பிரதேசங்களில் நியமிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்கள்.
மூப்புரிமை இலக்கம்
பெயர் ( மாவட்டம் )
139 என் வேதநாயகன் (யாழ்ப்பாணம்)
199 எஸ்.அருமைநாயகம் (கிளிநொச்சி)
203 ஆர்.கீதீஸ்வரன் (முல்லைத்தீவு)
286 எம்.உதயகுமார் (மட்டக்களப்பு)
இதேவேளை, தமிழ்
மொழி பேசும்
மக்கள் அதிக
எண்ணிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அம்பாறை மாவட்டத்திற்கு இந்த நல்லாட்சியில் தமிழ்
மொழி பேசும்
ஒருவர் அரச
அதிபராக நியமிக்கப்பட
மாட்டாரா என
இம்மாவட்டத்தில் வாழும் தமிழ் மொழி பேசும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இப்படியான
நிலையில் அம்பாறை
மாவட்டத்தில் சாரதியும்
நாங்களே நடதுனரும்
நாங்களே என
மார்பு தட்டுபவர்கள் சந்தர்ப்பங்களை
தவறவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இம்மாவட்டத்திற்கு
முஸ்லிம் ஒருவரை
அரசாங்க அதிபராக
(இந்த நல்லாட்சியில்)
நியமிக்க முடியாவிட்டாலும்
தமிழ் அரசியல்வாதிகளுடன்
இணைந்து நடவடிக்கை
எடுத்தாவது தமிழ் மொழி பேசும் ஒருவரை
அரசாங்க அதிபராக
நியமிப்பதற்கு ஜனாதிபதி, பிரதமருடன் பேசி முடிவெடுக்க
வேண்டியது இம்மாவட்டத்தின்
சாரதிகளினதும் நடத்துனர்களினதும் கடமையாகும்.
2017.12.20 ஆம் திகதி அரசாங்க நிர்வாக மற்றும்
முகாமைத்துவ அமைச்சு வெளியிட்டுள்ள இலங்கை நிர்வாக
சேவையில் விசேட
தரத்தில் மூப்புரிமைப்
பட்டியல் அடிப்படையில்
பின்வரும் முஸ்லிம்களும்
இருந்து கொண்டிருக்கிறார்கள்.
இது போன்று
தமிழர்களும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
மூப்புரிமை
இலக்கம் பெயர்
14
எஸ்.எம்.முஹம்மத்
37 ஏ.அப்துல்
மஜீத்
89 எம்
ஐ.அமீர்
117 யூ.எல்.ஏ.அஸீஸ்
141 எம்.ஏ.தாஜுதீன்
144 ஏ.மன்சூர்
147 ஏ.எச்.எம்.அன்ஸார்
162
ஆர்.யூ.அப்துல் ஜலீல்
163 ஐ.எம்.ஹனிபா
181
ஏ.சி.எம்.நபீல்
234 எம்.எம்.முஹம்மத்
266
ஏ.எல்.முஹம்மது சலீம்
267
எம்.எம்.நஸீர்
302 வை.எல்.முஹம்மது
நபவி
309
எம்.எம்.நயிமுதீன்
313 எம்.முஹம்மது நவ்பல்
325
எம்.எச்.எம்.றியாழ்தீன்
347
எம்.எச்.எம்.ஜமீல்
ஏ.எல்.ஜுனைதீன்
ஊடகவியலாளர்
0 comments:
Post a Comment