கூட்டு அரசாங்கத்தை நீடிக்கும் கடிதம் கிடைக்கவில்லை
– சபாநாயகர்
கரு ஜெயசூரிய
கூட்டு
அரசாங்கம் தொடர்பான
உடன்பாடு நீடிக்கப்படுவது
தொடர்பான எந்த
கடிதமும் தமக்குக்
கிடைக்கவில்லை என்று நாடாளுமன்ற சபாநாயகர் கரு
ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
கூட்டு
அரசாங்கத்தை அமைக்கும் உடன்பாடு புதப்பிக்கப்பட்டுள்ளதா, அவ்வாறாயின் அதற்கான
கடிதம் கிடைத்துள்ளதா
என்று நாடாளுமன்றத்தில்
நேற்று ஜேவிபி
உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க எழுப்பிய கேள்விக்குப்
பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த
நிலையில், கூட்டு
அரசாங்கத்தை அமைக்கும் உடன்பாடு காலாவதியாகி விட்ட
நிலையில், அரசியலமைப்பில்
அனுமதிக்கப்பட்ட அளவை விட, அமைச்சரவை, இராஜாங்க
மற்றும் பிரதி
அமைச்சர்களை பதவியில் வைத்திருப்பதன் மூலம், அரசியலமைப்பை
அரசாங்கம் மீறி
விட்டது என்று
கூட்டு எதிரணி
நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன குற்றம்சாட்டினார்.
ஐதேகவுக்கும்
சிறிலங்கா சுதந்திரக்
கட்சிக்கும் இடையிலான கூட்டு அரசாங்கத்தை அமைக்கும்
உடன்பாடு கடந்த டிசெம்பர்
31ஆம் திகதியுடன் காலாவதியாகி விட்டது
என்றும் எனவே,
அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்த வேண்டும்
என்றும் அவர்
கூறினார்.
0 comments:
Post a Comment