சைட்டத்துக்கு எதிராக முன்னெடுத்துள்ள
ஆர்ப்பாட்ட பேரணி மீது கண்ணீர்புகை தாக்குதல்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சைட்டத்துக்கு எதிராக முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி மீது கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து தண்ணீர் மற்றும் கண்ணீர்புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து காலி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்படுகின்றது
குறித்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு எதிராக, மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மேற்கொள்ளாதிருக்கும் வகையில் நுகேகொட மற்றும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றங்களால் நேற்றைய தினம் (24) தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment