மெளலவி அலி அஹமத் (ரஸாதி) அவர்களின்
மோட்டார் பைசிக்கள் அடித்து
நாசமாக்கப்பட்டுள்ளது
ஊரின் ஒற்றுமைபற்றி குத்பா பிரசங்கம் செய்தமைக்கே
முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்கள் செய்த அநியாயம்
கடந்த வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய
பள்ளிவாசலில் இஸ்லாம் கூறும் அரசியல்,சமூகத்தின்
ஒற்றுமை, ஊரின் ஒற்றுமை என்பன குறித்து குர் ஆன், ஹதீஸ் ஆகியவற்றையும் முஸ்லிம் மன்னர்களின் ஆட்சி முறைமைகளையும்
பிர்அவ்னின் கொடுங்க்கோண்மைகளையும் ஆதாரங்கள்
காட்டி குத்பா பிரசங்கம் செய்த மெளலவி ஏ.ஏ. அலி அஹமத் (ரஸாதி) அவர்களின் மோட்டார்
பைசிக்கள் தேர்தல் ஊர்வலத்தில் கிரிக்கெட் மட்டைகளுடன் சென்ற ஒரு குழுவினரால் அடித்து நாசமாக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருதில் பொலிஸாரின் பாதுகாப்புடன் ஊர்வலமாக
வந்த கோஷ்டியினராலேயே மெளலவியின் மோட்டார் பைசிக்களுக்கு இந்த அநியாயம் நடத்தப்பட்டுள்ளது.
யானைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம்
காங்கிரஸின் வேட்பாளர்கள் அயல் கிராமத்தைச் சேர்ந்த காடையர்களை சாய்ந்தமருதுக்கு
அழைப்பித்து வந்து ஊர்வலமாகச் செல்லும்போது இந்த அட்டூழியத்தைச் செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
மெளலவியின் தாயாரின் சாய்ந்தமருது வீட்டுக்கு முன் வைக்கப்பட்டிருந்த
மோட்டார் பைசிக்களையே காடையர் கூட்டம் இவ்வாறு அடித்து சண்டித்தனம் செய்துவிட்டுச்
சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாரத்தின் வெறி காரணமாக மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்காக
இஸ்லாத்தைப் போதிப்பவர்களையும் அவர்களுடைய உடைமைகளையும் கூட தற்போது தாக்க சிலர் துணிந்து விட்டார்கள் என இத் தக்குதல் குறித்து
மக்கள் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர்.
ஏ.எல்.ஜுனைதீன்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.