சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட

போலியான ரூபாகோடி பொருட்கள் அழிப்பு








சட்ட விரோதமாக இலங்கைக்குள் கொண்டு வரப்பட்ட சுமார் ரூபாகோடி பெறுமதியான பொருட்கள் இலங்கை சுங்க திணைக்களத்தால் நேற்று (22) உத்தியோகப்பூர்வமாக அழிக்கப்பட்டன.
ஜனவரி 26 ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச சுங்க தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கை சுங்கம், நுகர்வொர் பாதுகாப்பு பிரிவு, கொள்கைகள் திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி பிரிவுடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, சுங்கத் திணைக்களத்தில் பணிப்பாளர் நாயகம் P.S.M. சாள்ஸ் முன்னிலையில் இடம்பெற்றது.
போலியாக தயாரிக்கப்பட்டு இலங்கைக்கு இறக்கமதி செய்யப்பட்ட நிலையில், இலங்கை சுங்கத் திணைக்களத்தால் கைப்பற்றப்பட்ட பொருட்கள் இவ்வாறு அழிக்கப்பட்டதாக சுங்கத்திணைக்களம் அறிவித்துள்ளது.
இப்போலியான பொருட்கள் குறித்து மக்களுக்கு தெளிவூட்டுவதும் இந்நடவடிக்கையில் மற்றுமொரு நோக்கமாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில், போலியான பொருட்கள் பாரியளவில் நாட்டுக்கு நாடு பரிமாற்றமடைகின்றன. சுற்றாடல் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கக்கூடிய குறித்த பொருட்களால், சுற்றாடலுக்கு மாத்திரமன்றி சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கு மாத்திரமன்றி நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிய பாதிப்பை ஏற்படுத்துவதாக இலங்கை சுங்கத் திணைக்களத்தில் நிறுவப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு, நிறுவப்பட்ட இலங்கை சுங்கத் திணைக்களத்தில் நிறுவப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு பிரிவில் புலமைச் சொத்து பிரிவு உருவாக்கப்பட்டது. இப்பிரிவினால், போலியான, சட்டவிரோதமான பொருட்கள் கைப்பற்றப்பட்டு அரசுடைமையாக்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எவ்வித தர நிர்ணயமும் கருதாமல், தரம் குறைந்த மூலப் பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் இவ்வாறான போலியான பொருட்கள், சிறுவர்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியன, என ஆராய்ச்சிகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்து சட்டத்தின் கீழ், அனைத்து விதமான போலியான பொருட்களும், சுங்க கட்டளைச் சட்டத்தின் கீழ் ஏற்றுமதி செய்வதற்கோ, இறக்குமதி செய்வதற்கோ தடை செய்யப்பட்ட பொருளாக கருதப்படுகின்றது.
இவ்வருடத்தின் சர்வதேச சுங்க தின எண்ணக்கருவான "பாதுகாப்பான வர்த்தக சூழலில் பொருளாதார அபிவிருத்தி" என்பதன் அடிப்படையில் பொருட்களின் போலி உருவாக்கத்திற்கு எதிராக செயற்படுவதும் உள்ளடக்கப்படுகின்றது.
ரூபா 31 கோடி (ரூ. 30,229,345) பெறுமதியான போலியாக தயாரிக்கப்பட்ட சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்கள், மருந்துகள், வாகன உதிரிப்பாகங்கள், கையடக்கத் தொலைபேசியின் பகுதிகள், காகிதாதிகள், மற்றும் உடைகள் உள்ளிட்ட 121,187 பொருட்கள் இவ்வாறு இவ்வாறு அழிக்கப்பட்டன.
குறித்த பொருட்கள், புலமைச் சொத்து சட்டம் மற்றும் சுங்கத் கட்டளைச் சட்டம் ஆகியவற்றை மீறும் வகையில் சட்டவிரோதமாக இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அழிக்கப்பட்ட பொருட்களின் மீதங்கள், சுற்றாடலுக்கு தீங்குவிளைவிக்காத வகையில் அகற்றப்படவுள்ளதோடு, ஒரு சில பொருட்கள் மீள்சுழற்சிக்கும் உட்படுத்தப்படவுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்கள்:

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top