நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட

சோதனையில் 1670 பேர் கைது

போக்குவரத்து வீதி மீறல் தொடர்பில்

3,715 வழக்குகள் பதிவு



நாடு முழுவதும் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 1,670 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, போக்குவரத்து வீதி மீறல் தொடர்பில் 3,715 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

நேற்று (30) இரவு 11.00 மணி முதல் இன்று அதிகாலை 3.00 மணி வரை, பொலிஸ் மா அதிபரின் உத்தரவு மற்றும் ஆலோசனைக்கமைய, நாடு முழுவதிலுமுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் எல்லை பிரதேசங்களும் உள்ளடங்கியதாக, பொலிஸ் வீதித் தடை மூலம் குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

விபரம்
போதையில் வாகனம் செலுத்தியோர் கைது - 719
பிடியாணை பிறப்பிக்கப்பட்டோர் கைது - 397
பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது - 554
போக்குவரத்து வழக்குகள் - 3,715
சட்டவிரோதமாக ஆயுதங்கள் பறிமுதல் - 05
போதையில் முறையற்று நடத்தல், மண் மற்றும் மர கடத்தல் வழக்கு - 46
விச மதுபானம், சட்டவிரோத மதுபான சுற்றி வளைப்பு - 420
- ஹெரோயின் கைப்பற்றல் - 13 கிராம் 943 மில்லி கிராம்
- கஞ்சா கைப்பற்றல் - 11 கிலோ 293 கிராம்
- வேறு போதை பொருட்கள் கைப்பற்றல் - 176 மில்லி கிராம்
- சட்ட விரோத மதுபானம் - 3,860 லீட்டர்
- வேறு மதுபானம் - 6,491 லீட்டர்

குறித்த நடவடிகளுக்காக 1,308 வீதித் தடைகள் இடப்பட்டு, 20,913 வாகனங்கள் சோதனையிடப்பட்டுள்ளதோடு, 42,673 பேர் இதன்போது சோதனையிடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top