பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும்
மரக்கறிகளின் அளவு அதிகரிப்பு
வர்த்தக சங்கத் தலைவர் தெரிவிப்பு
தற்போது நிலவும் சீரான காலநிலை காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் அளவு அதிகரித்துள்ளதாக நிலையத்தின் வர்த்தக சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 60 ரூபா வரை குறைந்துள்ளது. ஒரு கிலோ பச்சை மிளகாயின் விலை 600 ரூபாவிலிருந்து 40 ரூபா வரை குறைந்திருப்பதாக அவர் கூறினார்.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் மரக்கறி விலை 50 சதவீதத்தால் குறைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
0 comments:
Post a Comment