கிழக்கு முஸ்லிம்களை இழிவுபடுத்திய விவகாரம்!
ஷபீக் ரஜாப்தீன் சகல பதவிகளில் இருந்தும் இராஜினாமா!!
.
கிழக்கு
முஸ்லிம்களை இழிவுபடுத்திய சபீக் ரஜாப்தீன்-முஸ்லிம்.காங்கிரஸின் தேசிய
அமைப்பாளர் மற்றும், நீர்
வழங்கல் அதிகார
சபையின் பிரதித்
தலைவர் பதவிகளில் இருந்து
இராஜினாமா செய்துள்ளதாக முஸ்லிம்
காங்கிரஸின் பிரதித் தவிசாளரும்,
அமைச்சர் ரவூப் ஹக்கீமுடைய
அந்தரங்கச் செயலாளருமான, மசிஹுதீன் நயீமுல்லாஹ் தெரிவிததுள்ளார்.
“நாங்கள்
தலைமை தாங்குகின்றவர்கள்,
நீங்கள் எப்போதும்
தலைமை பின்னால்
வருகின்றவர்கள்”
“கிழக்கு
மாகாணத்தவர்கள் சந்தர்ப்பவாதிகள். அரசியல் செல்வாக்குடன் தொழில்களை
பிச்சையாகக் கேட்டு அலைபவர்கள்”.
“கிழக்கு
மாகாணத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்கள்
வாசல் படிக்கட்டில்
கிழக்கு மாகாணத்தவர்கள்
வந்து கிடப்பீர்கள்.
சுனாமி காலத்தில்
நாங்கள்தான் உங்களுக்கு உதவினோம்”.
“உங்களுக்கு
நல்ல தலைவா்
இருந்தால் ஏன்
எமக்குப் பின்னால்
நிற்கின்றீர்கள்”
“நாம்
ஆள்பவா்கள், கிழக்கானுகள் ஆளப்படுபவன்கள்”……
போன்ற
கருத்துக்களை அவர் முகநூளில் தெரிவித்ததை அடுத்து
சர்ச்சை வெடித்த
நிலையில் அவர்
பகிரங்க மன்னிப்பு
கேட்க வேண்டும்
என கிழக்கு
மக்களால் கோரிக்கை
விடப்பட்டது. தேர்தலும் நெருங்கிய நிலையில்,
கட்சிக்குள்ளும், சக போராளிகளுக்கும்
புதிய தலையிடியாக இவரின் முகநூல் பதிவு மாறியது.
சபீக் ரஜாப்தீனின் இந்த நடவடிக்கையினால் கட்சி மீதும் தலைமைத்துவம் மீதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்ததுடன், இவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கட்சி முக்கியஸ்தர்களும் இதற்கு அழுத்தம் கொடுத்திருந்தனர்.
இதனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறித்த விடயம் தொடர்பில் சபீக் ரஜாப்தீனிடம் விளக்கம் கோரியிருந்தார். இதனைத் தொடர்ந்தே முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்தும் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவர் பதவியில் இருந்தும் தான் விலகிக் கொள்வதாக இன்று புதன்கிழமை அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு சபீக் ரஜாப்தீன்அறிவித்துள்ளார்.
இவரது ராஜினாமா குறித்து முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் இராஜினாமாச் செய்வதுடன் மாத்திரம் நின்று விடாமல் கிழக்கு மக்களிடம்
பகிரங்க மன்னிப்பும் கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிழக்கு மக்களிடம்
வலுத்து வருகின்றது.
இவரின் முகநூல் பதிவுகுறித்து மக்கள் விருப்பம் கிழக்கு மக்களின் கோரிக்கையை வெளிப்படுத்தி இவ்வாறு பதிவேற்றியிருந்தது.
https://makkalviruppam.blogspot.com/2018/01/blog-post_118.html
கிழக்கு மக்களை தரக்குறைவாக முகநூலில் பதிவிட்ட
சபீக் ரஜாப்தீனை கட்சியின் மூலம் வழங்கப்பட்ட
சகல பதவிகளிலிருந்தும் நீக்க வேண்டும்
அமைச்சர் ஹக்கீமிடம் கிழக்கு மக்கள் கோரிக்கை
கிழக்கு மக்களின் வாக்குகளால் அமைச்சுப் பதவியைப்பெற்று அதன்மூலம்நீர் வழங்கல் அதிகார சபையின் பிரதித் தலைவரானமுஸ்லிம்.காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் கிழக்கில் உள்ள மக்களைப் பற்றி தாழ்வான ஒரு
எண்ணத்தில் உள்ளார் என்பதை அவரின் முகநூல் பதிவின் மூலம் வெட்டவெளிச்சத்திற்கு
வந்துள்ளது.
முஸ்லிம்.காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் கிழக்குமாகாணத்தவர்கள் பற்றி உள்ளத்தில் உள்ள அபிப்பிராயத்தை தனதுமுகநூலில்
இவ்வாறு ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.
“நாங்கள் தலைமை தாங்குகின்றவர்கள், நீங்கள் எப்போதும் தலைமைபின்னால் வருகின்றவர்கள்”
“கிழக்கு மாகாணத்தவர்கள் சந்தர்ப்பவாதிகள். அரசியல் செல்வாக்குடன்தொழில்களை பிச்சையாகக் கேட்டு அலைபவர்கள்”.
“கிழக்கு மாகாணத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்கள் வாசல்படிக்கட்டில் கிழக்கு மாகாணத்தவர்கள் வந்து கிடப்பீர்கள். சுனாமிகாலத்தில் நாங்கள்தான் உங்களுக்கு உதவினோம்”.
இந்தப்பதிவுகள் தற்போது அவரின் முகநூலில் இருந்து அவரால்
அகற்றப்பட்டுள்ளது.
கிழக்கு மக்கள் அளித்த வாக்குப் பலத்தால்தான் அவரும் நீர் வழங்கல்அதிகார சபையின் பிரதித் தலைவராக இருந்து கொண்டிருக்கிறார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அவரை கிழக்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வைத்து கிழக்கு மக்கள்மூலமாக கிடைத்துள்ள அந்தப் பதவியை இராஜினாமாச் செய்ய உத்தரவிடல் வேண்டும் இல்லையேல்அமைச்சரிடமும் கிழக்கு மக்கள் பற்றி அந்த அபிப்பிராயம் இருப்பதாகவே கிழக்கு மக்கள் நம்பவேண்டியிருக்கும் என கிழக்கில் உள்ள மக்கள் அமைச்சரிடம்
வேண்டுகோள் விடுக்கின்றனர்.
0 comments:
Post a Comment