தேர்தல் காலத்தில் மாத்திரம்

அபிவிருத்திகளை கேட்கின்ற

சமூகமாக முஸ்லிம் சமூகம் இருக்கக்கூடாது.

கண்டியில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

எமது பிரதேசங்களில் பாதை இல்லை, வசதிகளுடனான பள்ளிக்கூடங்கள் இல்லை, மையவாடிகள் இல்லை, வீடு வசதிகள் இல்லை, தொழில் வசதிகள், கைத்தொழிற்சாலைகள் வேண்டும் என்பன போன்றவைகளை தேர்தல் காலத்தில் மாத்திரம் கேட்கின்ற சமூகமாக எமது முஸ்லிம் சமூகம் இருக்கக்கூடாது. இன்று பல இடங்களிலும் இவ்வாறான நிலைமையைத்தான் நாம் பார்க்கின்றோம்.
தேர்தல் முடிந்தால் மக்களால் வாக்களித்து தேர்த்தெடுக்கப்பட்டவர்களைக் காணமுடியாது அல்லது மக்களின் தேவைகளை அறிந்து திட்டமிட்டுச் செய்யமாட்டார்கள். இதனால்தான் தேர்தல் வரும் காலத்தில் பிரதேசத்தின் குறைகளை மக்கள் இவ்வாறு தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள்என கண்டியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் பேசுகையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு பேசுகையில் மேலும் தெரிவித்ததாவது,.
வன்னியிலிருந்து மக்களைச் சந்திக்க நான் இங்கு வந்திருப்பது ஒரு பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்பதற்வோ அல்லது மாகாண சபை உறூப்பினராக ஆக வேண்டும் என்பதற்காகவோ அல்ல.
ஒரு சிறு வாக்குப்பலத்தை கொண்டுள்ள எனது பிரதேச மக்கள் 2001 ஆம் ஆண்டு அகதி முகாமில் இருந்த என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பினார்கள். அந்த மக்கள் தொடர்ந்து நான்கு பொதுத் தேர்தலில் எனக்கு வாக்களித்து என்னை வெற்றி அடையச் செய்திருக்கிறார்கள்.
இந்த மாவட்டத்திலுள்ள வாக்குப் பலத்தைவிட மூன்றில் ஒரு பங்குதான் என்னுடைய மாவட்ட மக்களின் வாக்குகள் உள்ளன. அந்த குறைந்த எண்ணிக்கையான வாக்குகளை வைத்து அந்த மக்கள் நன்றாகச் சிந்தித்து அரசியல் செய்ததன் காரணமாகத்தான் அங்குள்ள மக்கள் அதன் பிரயோசனத்தை அனுபவிக்கின்றார்கள்.
அதன் அடிப்படையில்தான் நாடு முழுவதும் வாழும் எமது முஸ்லிம் சமூகத்திற்கு சேவை செய்வதற்கு அந்த மக்கள் எங்களுக்கு களம் அமைத்துத் தந்திருக்கிறார்கள்.
எனவே, அமைச்சரவையின் அந்தஸ்துள்ள ஒரு அமைச்சராக 5 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஒரு தூய்மையான எண்ணங்கள் கொண்ட ஒரு அரசியல் கட்சியின் தலைவனாக மக்களைச் சந்தித்து கொண்டிருக்கின்றோம்.
எமது முஸ்லிம் சமூகம் கல்வி, பொருளாதாரம் உட்பட சகல துறைகளிலும் முன்னேற்றம் காணப்படல் வேண்டும் அவர்களின் உரிமைகள் சரியான முறையில் பாதுகாக்கப்படல் வேண்டும் என்ற நன்னோக்கில் அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்தவர்களாக மக்களாகிய உங்கள் முன் அரசியல் செய்ய வந்திருக்கின்றோம்.
கடந்த காலத்தில் சிலர் மக்களாகிய உங்கள் முன் வந்தார்கள் சிலரைக் காணவில்லை., சிலர் இன்னும் இருக்கிறார்கள் ஆனால், சிலர் இங்கு வந்துதான் அரசியல் முகவரியைப் பெற்றுக்கொண்டார்கள் அல்லது அரசியல் அந்தஸ்தை உயர்த்திக்கொண்டார்கள். அப்படிப்பட்டவர்களோடு ஒப்பிட்டு வீதிகளில் எங்களைப் பேசுபவர்கள் சற்று சிந்திக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.
மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் மக்களின் முன்னேறத்திற்காக என்ன திட்டங்களை வகுத்திருக்கிறார்கள்? என்ன அபிவிருத்தி வேலைகளைச் செய்திருக்கிறார்கள்? ஏனைய எமது சகோதரர்களின் பிரதேசங்களைப் போய் பாருங்கள் உண்மையைக் கண்டுகொள்வீர்கள்.
எமது சமுதாயம் எமது பிரதேசங்களில் பாதை இல்லை, பள்ளிக்கூடங்கள் வசதிகளுடன் இல்லை, மையவாடிகள் இல்லை, வீடு வசதிகள் இல்லை, தொழில் வசதிகள், கைத்தொழிற்சாலை வேண்டும் என்பன போன்றவைகளை தேர்தல் காலத்தில் மாத்திரம் கேட்கின்ற சமூகமாக எமது முஸ்லிம் சமூகம் இருக்கக்கூடாது. இன்று பல இடங்களிலும் இவ்வாறான நிலைமையைத்தான் நாம் பார்க்கின்றோம்.
தேர்தல் முடிந்தால் மக்களால் வாக்களித்து தேர்த்தெடுக்கப்பட்டவர்களைக் காணமுடியாது அல்லது மக்களின் தேவைகளை அறிந்து திட்டமிட்டுச் செய்யமாட்டார்கள். இதனால்தான் தேர்தல் வரும் காலத்தில் பிரதேசத்தின் குறைகளை மக்கள் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு மாறாக மக்களுக்கு எதைச் செய்யவேண்டுமோ அதனைத் திட்டமிட்டு செய்கின்ற கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயல்படும். சிலர் உங்களை இல்லாத பொல்லாத கதைகளைக் கூறி நடிகர்கள் போல நாடகமாடி ஏமாற்ற வருவார்கள் ஏமாந்து விடாதீர்கள்.
ஒரு சமூதாயத்தின் முன்னேற்றம் கல்வியின் வளர்ச்சியில்தான் தங்கியுள்ளது. கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் விட்ட தவறுகளை உணரச் செய்வதற்காகவும்  வாக்களித்த  மக்களுக்கு செய்ய வேண்டியவற்றை சரியாக செய்ய  வைப்பதற்காகவும் உங்களின் வாக்குகளைச் சிந்தித்து பாவிக்க வேண்டிய சந்தர்ப்பமே இதுவாகும்.
இப்பிரதேச மக்களாகிய நீங்கள் விரும்பினால் ஒன்றுபட்டு வாக்களித்து எங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை தந்து பாருங்கள். கடந்த காலங்களில் நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்திருக்கிறீர்கள். முஸ்லிம் காங்கிரஸுக்கு கொடுத்திருக்கிறீர்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு கொடுத்திருக்கிறீர்கள். இது போன்று ஏனைய கட்சியினருக்கும் கொடுத்திருக்கிறீர்கள். இவ்வாறு  வாக்குகளைக் கொடுத்த இந்த மக்களுக்கு கிடைத்தது  என்ன என்று கேள்வி கேட்டுப்பார்த்தால் அதற்கான பதில் மக்களுக்கு நாம் சொல்லாமலே நன்கு தெரியும்.
ஒரு பிரதேச மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 5 வருட காலம் போதும். எமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 70 வருடங்கள் ஆகின்றன. ஆனால், நாம் தேர்தல் காலங்களில் வாக்களிக்கின்ற மெஷின்களைப் போன்று வாக்களிக்கின்ற மக்களாக எமது காலங்களைக் கழித்திருக்கின்றோம்.
நடைபெறவிருக்கும் இந்த உள்ளூராட்சி தேர்தலில் மக்களாகிய உங்களின் ஒற்றுமையை எதிர்பார்க்கின்றோம். இந்த மக்களின் பிரார்த்தனையை (துஆ) எதிர்பார்க்கின்றோம்.
எங்களது கண்டிக்கான வருகை பலருக்கு பிரச்சினையாக உள்ளது. கூட்டங்களைப் வைக்க வேண்டாம் என்று தடை செய்யக்கூடிய அளவுக்கு எமது குறுகிய கால பயணம் சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்திவிட்டது. இவ்வாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள், தமது அரசியல் செயற்பாடுகளில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்குத் தீர்மானித்துள்ளமையை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு,கண்டியிலுள்ள மக்கள் வழங்கிய அன்பும் ஆதரவும் வெளிப்படுத்திக்காட்டியுள்ளது.
கண்டி மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளான ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை, அக்குரணை பிரதேச சபை, பாத்ததும்பர பிரதேச சபை, உடபலாத்த பிரதேச சபை, உடுநுவர பிரதேச சபை, யட்டிநுவர பிரதேச சபை, பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை கம்பளை நகரசபை ஆகியவற்றில், தனித்துக் களமிறங்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீனை ஆதரித்து அலையலையாக மக்கள் திரண்டிருந்தனர்.
கண்டி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் உள்ளூராட்சி சபை வேட்பாளர்களை ஆதரித்து உடுதெனிய, தெல்தொட்ட, கஹடபிடிய, கலிகமுவ, தெல்லங்க, படுபிடிய, அம்பரபொல, வெலம்பொட, குறுக்குத்தல, தெஹியங்க, உக்ரஸ்பிட்டிய, இனிகல, உடதலவின்ன ஆகிய இடங்களில் நேற்று முன் தினம்  (28) தேர்தல் பிரசாரக் கூட்டங்கள்  இடம்பெற்றன.
காலை பத்து மணி தொடக்கம் நள்ளிரவு வரை இடம்பெற்ற சுமார் 13 கூட்டங்களில் அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
காலாகாலமாகத் தேசிய கட்சிகளுக்கும், ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கும் தாங்கள் வாக்களித்திருந்த போதும், இந்த மாவட்டத்திலுள்ள எந்த முஸ்லிம் பிரதேசங்களிலும் அபிவிருத்தியும், குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை, தேர்தல் மேடைகளில் பேசிய சமூக ஆர்வலர்கள் வெளிப்படுத்தினர்.
தேர்தலுக்கு தேர்தல் வந்து, தமது வாக்குகளைப் பெற்று அமைச்சர்களாகவும், மாகாண சபை உறுப்பினர்களாகவும், அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் முஸ்லிம் அரசியல்வாதிகள், தமது கோரிக்கைகள் எதனையுமே நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்தனர்.
அந்தக் கூட்டங்களில் வேட்பாளர்கள், தமது கிராமங்களில் உள்ள குறைபாடுகளை அமைச்சரிடம் எடுத்துக் கூறினர். அமைச்சரின் உரைகளை அங்கு குழுமியிருந்த மக்கள் மிகவும் அமைதியாகவும், உன்னிப்பாகவும் கேட்டதுடன், சில சந்தர்ப்பங்களில் அவர்களின் ஆரவாரம், மக்கள் காங்கிரஸுக்கே தமது முழுமையான ஆதரவு என்பதை வெளிப்படுத்தியது.
பச்சைக்கும், நீலத்துக்கும், மஞ்சளுக்கும் வாக்களித்த கைகள், இனி மயிலுக்கே வாக்களிக்கும் என்ற உறுதியை ஊர்ப்பிரமுகர்கள் கூட்டத்தில் தெரிவித்ததை அவதானிக்க முடிந்தது.
முஸ்லிம் சமூகத்துக்குப் பிரச்சினைகள் ஏற்படும் போது துணிந்து, உயிரையும் துச்சமென மதிக்காது, நடுநிசி வேளையிலே அமைச்சர் ரிஷாட் சம்பவ இடத்துக்குச் செல்வதையும், பாதிக்கப்பட்டவர்களின் குறைதீர நடவடிக்கை எடுப்பதையும் நாங்கள் கண்ணாரக் கண்டிருக்கின்றோம். அதனால்தான் இம்முறை தேர்தலில், மயில் கட்சியின் சார்பாக களத்தில் இறங்கியுள்ளோம். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கண்டி மாவட்டத்தில் தனக்கு வாக்குக் கேட்பதற்காக வரவில்லை. வேட்பாளர்களாகிய எங்களை வெல்ல வைப்பதற்காகவே இங்கு வந்துள்ளார். எனவே, எங்களை வெல்ல வைத்து அவரின் கரங்களைப் பலப்படுத்தி, உள்ளூராட்சி சபைகளில் மட்டுமின்றி, அவர்களின் அதிகாரத்தின் மூலம், நமது மக்கள் பயனடைய வழி வகுப்போம்இவ்வாறு மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்கள், கூட்டங்களில் உரையாற்றியமையும்  குறிப்பிடத்தக்கது.
-ஊடகப்பிரிவு




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top