உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - 2018

திருகோணமலை  மாவட்டத்தில் வாக்களித்தவர்களின்

3ஆயிரத்து 38 வாக்குகள் நிராகரிப்பு

48ஆயிரத்து 372பேர் எவருக்கும்  வாக்களிக்கவில்லை



நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 13 சபைகளுக்குமானதேர்தலில் வாக்களித்தவர்களின் 3 ஆயிரத்து 38 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆகக்கூடுதலான வாக்குகள் திருகோணமலை டவுன் மற்றும் கிராவெட்ஸ் பிரதேச சபைக்கான தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களின் வாக்குகளே நிராகரிக்கப்பட்டுள்ளன. இங்கு 496 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
இம்மாவட்டத்தில் அடுத்து கந்தளாய் பிரதேச சபைக்கான தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களின் 469 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
திருகோணமலை நகர சபைக்கான தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களின் நிராகரிக்கப்பட்ட  444 வாக்குகள் இம்மாவட்டத்தில் மூன்றம் இடத்தில் உள்ளது.
இம்மாவட்டத்தில் 48 ஆயிரத்து 372 பேர் எவருக்கும்  வாக்களிக்கவில்லை.
- .எல்.ஜுனைதீன்
   

திருகோணமலை மாவட்டம் உள்ளூராட்சித் தேர்தல் - 2018
உள்ளூராட்சி சபைகள்
மொத்த வாக்குகள்
அளிக்கப்பட்ட வாக்குகள்
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்
செல்லுபடியான வாக்குகள்
கோமரன்கடவல பிரதேச சபை
6,040
5,482
34
5,448
தம்பலகமுவ பிரதேச சபை
20,743
17,007
226
16,781
சேருவில பிரதேச சபை

10,432
8,954
67 ?
8,954 *
திருகோணமலை நகர சபை
31,164
24,011
444
23,567
கிண்ணியா பிரதேச சபை
20,003
16,127
256
15,871
மூதூர் பிரதேச சபை
43,363
34.753
352
34,401
பதவிய ஸ்ரீபுர பிரதேச சபை
8,748
7,515
50
7,465
குச்சவெளி பிரதேச சபை
23,402
19,732
231
19,501
மொறவெவ பிரதேசசபை
5,772
5,138
50
5,088
கந்தளாய் பிரதேச சபை
34,666
30,129
469
29,660
வெருகல் பிரதேச சபை
7,912
6,672
120
6,552
கிண்ணியா நகர சபை
25,410
20,771
243
20,528
திருகோணமலை டவுன் மற்றும் கிராவெட்ஸ் பிரதேச சபை
35,167
28,159
496
27,663
மொத்தம்
2,72,822
2,24,450
3,038
2,21,479
* சேருவில பிரதேச சபை  8,954          - 67 ? =                 8,954



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top