தாஜ்மகால் அழகில் மயங்கிய கனடா பிரதமர்


இந்தியா சென்றுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோதனது குடும்பத்தாருடன் நேற்று ஆக்ரா சென்று தாஜ்மகாலைச் சுற்றிப் பார்த்தார்பின்னர் தாஜ்மகால் முன்பு குடும்பத்துடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.  
உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகாலின் அழகில் கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோ மயங்கினார்.
இந்தியாவில் முதலீடு செய்வதற்கும்இந்தியாவுடனான வர்த்தகத்தை அதிகரிப்பது தொடர்பாகவும் ஒரு வார கால சுற்றுப்பயணமாக கனடா பிரதமர் ஜஸ்டின் நேற்று இந்தியா சென்றுள்ளார்அவருடன் அவரது மனைவி சோபி கிரெகோயிர், 3 குழந்தைகளும் சென்றுள்ளனர்இந்தியா சென்றதும்அவர் தனது சுற்றுப்பயணத்தை ஆக்ராவில் நேற்று தொடங்கினார்.
2015-ல் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் அவர் முதன்முதலாக இந்தியா சென்றுள்ளார்.
தாஜ்மகாலுக்கு சென்ற அவர்அந்த நினைவுச்சின்னத்தின் அழகிலும் பொலிவிலும் மயங்கினார்சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் நினைவுச் சின்னத்தைச் சுற்றிப் பார்த்த அவர் அங்குள்ள காதலர்கள் பெஞ்சில் அமர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
பின்னர் அவர் மதுராவின் சுர்முரா பகுதியில் அமைந்துள்ள வனவாழ்வு சரணாலயத்துக்குச் சென்றார்கனட பிரதமரின் வருகையையொட்டி 2 மணி நேரத்துக்கு சரணாலயத்துக்குள் பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து அவர் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார்இரு நாட்டு உறவுகள் மேம்படுதல்வர்த்தகத்தை அதிகரித்தல்இந்தியாவில் முதலீடு செய்தல் போன்ற விஷயங்கள் குறித்து பிரதமர் மோடியுடன்பிரதமர் ஜஸ்டின் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
புதன்கிழமை அவர் பஞ்சாபிலுள்ள அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குச் செல்லவுள்ளார். 2016-ம் ஆண்டில் இந்தியா-கனடா நாடுகளிடையேயான வர்த்தகம் 800 கோடி அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளதுகடந்த 2015-ல் கனடா சென்ற பிரதமர் மோடிடொரண்டோவில் வசிக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களிடையே உரையாற்றினார் குறிப்பிடத்தக்கது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top