பயணிகள் விமானம் நொறுங்கி
விழுந்து விபத்து
66 பேர் பலி
ஈரான்
நாட்டின் டெஹ்ரான்
நகரிலிருந்து யசூச் நகருக்கு சென்ற பயணிகள்
விமானம் நொறுங்கி
விபத்துக்குள்ளானதில் 66 பேர் பலியானதாக
செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்று
(18) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தில்,
அவ்விமானத்தில் பயணித்த 66 பேரும் மரணமடைந்துள்ளதாக, அந்நாட்டின் விமான சேவையான ஈரான்
அசேமன் எயார்லைன்ஸ் (Iran Aseman Airlines) நிறுவன பேச்சாளர்
அறிவித்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் தகவல்
வெளியிட்டுள்ளது.
ஈரான்
நாட்டின் தலைநகர்
டெஹ்ரானில் இருந்து இஸ்ஃபாஹன் மாகாணத்தில் உள்ள
யசூச் நகரத்திற்கு
இன்று காலை
பயணிகள் விமானம்
ஒன்று புறப்பட்டுச்
சென்றது. ATR-72 என்ற அந்த விமானத்தில் 66 பயணிகள்
இருந்ததாக கூறப்படுகிறது.
வானில் பறந்து
கொண்டிருக்கும் போதே ரேடாரில் இருந்து விமானம்
மாயமானது.
குறித்த
விபத்து இடம்பெற்ற
வேளையில் அங்கு
ஓரளவான பனிமூட்டம்
நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த
விமானத்தில் 60 பயணிகள், விமானிகள் உள்ளிட்ட ஆறு
விமான சேவை
பணியாளர்கள் பயணித்தாக அந்நாட்டு அரச ஊடகம்
உறுதிப்படுத்தியுள்ளதோடு, அவர்கள் அனைவரும்
உயிரிழந்திருப்பதாகவும் அறிவித்துள்ளது.
இதனை
அடுத்து, டெஹ்ரானில்
இருந்து 480 கி.மீ தொலைவில் தென்மேற்கு
பகுதியில் உள்ள
செமிரோம் மலைப்பகுதியில்
விமானம் நொறுங்கி
விபத்துக்குள்ளனதாக ஈரான் ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன.
விமானத்தில்
இருந்த 66 பேரும்
பலியானதாக ஈரான்
அஸீமான் விமான
நிறுவனம் அறிவித்துள்ளது.
ஈரான்
அசேமன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தின்
தலைமையகம் தெஹ்ரானில்
உள்ளது. குறிப்பாக
ஈரானின் நகரங்களுக்கிடையே
தொலைதூர விமானநிலையங்களுக்கும்,
சர்வதேச அளவிலும்
சேவைகளையும் வழங்கி வரும் இந்நிறுவனமானது, பகுதியளவான
தனியார் சேவை
நிறுவனம் என்பது
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment