அரச முகாமைத்துவ உதவியாளர்களுக்கான
நேர்முகப்பரீட்சை
அடுத்த மாதம் ஐந்தாம் திகதி ஆரம்பம்
அரச முகாமைத்துவ சேவையில் மேலும் ஆறாயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இதன் அடிப்படையில் பரீட்சை மற்றும் வரையறுக்கப்பட்ட பரீட்சையில் தகுதி பெற்றுள்ளவர்களுக்கான நேர்முக பரீட்சை அடுத்த மாதம் ஐந்தாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
.சமீபத்தில் நடைபெற்ற பரீட்சையில் பரீட்சார்த்திகள் பெற்ற புள்ளிகள் தற்பொழுது இணையத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. மாவட்ட மட்டத்தில் அரச முகாமைத்துவ சேவைக்கு தகுதி பெற்றுள்ளவர்களுக்கான வெட்டுப்புள்ளி இணையத்தளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
தகுதி பெற்றவர்கள் நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்படவுள்ளனர். இதன்போது சான்றிதழ்கள் பரிசோதிக்கப்படும். நேர்முக பரீட்சையின் போது புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது என்று அரச நிர்வாக அமைச்சின் ஒன்றிணைந்த சேவை பணிப்பாளர் நாயகம் திருமதி கே.வி.பி.எம்.ஜே.கமகே தெரிவித்துள்ளார்
வரையறுக்கப்பட்ட பரீட்சையில் சித்தி பெற்ற ஆயிரத்து 477 பேரும் பகிரங்க பரீட்சையில் சித்தி எய்தி மூவாயிரத்து 905 பேரும் அரச முகாமைத்துவ சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ம் திகதி அளவில் அரச முகாமைத்துவ சேவையில் நிலவிய அனைத்து வெற்றிடங்களும் இவர்களைக் கொண்டு பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்று பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment