பத்தரமுல்ல நிர்வாக நிலையத்திற்குள்

ஜனாதிபதி மாளிகை, அலுவலகம்,

பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம்,

அலுவலகங்களையும் அமைக்க நடவடிக்கை



அரச நிதி பேரங்களுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களை தவிர்ந்த ஏனைய சகல அரச நிறுவனங்களையும் பத்தரமுல்ல நிர்வாக நிலையத்திற்குள் கொண்டு செல்லப்படும்.
ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி அலுவலகம், பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம், பிரதமர் அலுவலகம் போன்றவையும் பத்தரமுல்ல பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்படும்.

மேற்கு வலய பெருநகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட பத்தரமுல்ல அபிவிருத்தி திட்டத்தை வெளியிடும் வைபவத்தில் பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த இடத்தில் ஏற்கனவே 113 அரச நிறுவனங்கள் இயங்குவதாக குறிப்பிட்ட அமைச்சர் இந்தத் திட்டத்தின் கீழ் செற்சிறிபாய இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நிர்மாண பணிகள் இவ்வாண்டு ஆரம்பமாகும். இவை பூர்த்தியான பின்னர் ஏனைய அரச நிறுவனங்களும் அங்கு கொண்டு செல்லப்படும்.

வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் இலகு ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கு ஜப்பான் உதவி செய்யவுள்ளது.
இலகு ரயில் சேவைக்கான கட்டுமாண வேலைகள் இவ்வாண்டு கடைசிப் பகுதியில் தொடங்கப்படவுள்ளன. பல்நோக்கு போக்குவரத்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதற்கு தனியார் துறையின் பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்படும் என்றும்  பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க விபரித்தார்.

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உரையாற்றுகையில், பத்தரமுல்ல நகரை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏனைய அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பு தேவை என்றார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top