சர்ச்சைகளுக்கு மத்தியில்
இன்று கூடுகிறது பாராளுமன்றம்.!
தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள முரண்பாடான நிலைமையினால் பிரதமர் பதவி நீக்கம், தனியாட்சி கோஷங்கள் மற்றும் கட்சிகளின் வெவ்வேறான குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு தினமும்நாட்டின் அரசியல் பரபரப்பாகும் சூழலில் இன்று திங்கட்கிழமை பாராளுமன்றம் கூடுகின்றது.
இதன்போது பிரதான அரசியல் கட்சிகள் தமது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க கூடிய வாய்ப்புகள்அதிகமாக உள்ளன. அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள்தெரிவிக்கின்றன. அத்துடன் சில வேளைகளில் கட்சி தாவல்கள் இடம்பெற கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்காரணமாக சர்ச்சையான நிலைமை இன்றைய பாராளுமன்றத்தில் ஏற்பட கூடிய சாத்தியம்உள்ளது. மேலும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விவாதம் நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது. எனினும் சில சந்தர்ப்பங்களில் இன்று பாராளுமன்ற ஒத்திவைக்கப்படும் சாத்தியமும் உள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெறுபேறுகள் வெளிவந்த பின்னர் தேசிய அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் இருபிரதான கட்சிகளும் பிளவடைந்துள்ளன. தேசிய அரசாங்கத்தை நிறுவ கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தமும் நிறைவடைந்துள்ளது. இதனால் பிரதமர் பதவியிலும் சிக்கலான நிலைமைஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த வாரம் முழுவதும் அரசியல் ரீதியாக நாடு பரப்பரப்பாக காணப்பட்டது.
இதன்படி ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பத்தில் தனி ஆட்சி அமைப்பதாக கூறி விட்டு பின்னர் தேசிய அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து பயணிப்பதாக அறிவித்தது. அதனையடுத்து தற்போது கூட்டுஎதிர்க்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து தனித்து ஆட்சி அமைக்கவுள்ளதாககூறி வருகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியினரே பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு ரணில் விக்கிரமசிங்கவிற்கு அழுத்தம் பிரயோகித்த போதிலும் நான் பிரதமர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என ரணில்விக்கிரமசிங்க கூறியுள்ளார். அத்துடன் சஜித் பிரேமதாஸவும் கரு ஜயசூரியவும் பிரதமர் பதவிபொறுப்பினை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அரசியல் ரீதியாக பரப்பரப்பான சூழல் ஏற்பட்டுள்ள தருவாயில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் பின்னர் கூடும் முதலாவது பாராளுமன்ற அமர்வாகும்.
இதன்படி இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது பல்வேறு சர்ச்சைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதன்போது இரு பிரதான கட்சிகள் யாருக்கு பெரும்பான்மை அதிகாரம்உள்ளது என்பதனை நிரூபிப்பதற்கு வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்த வண்ணமுள்ளன. சுதந்திரக் கட்சியினர் ஒரு சிலரும் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஒருசிலர் சுயாதீனமாக செயற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகின்றது. இதன்பிரகாரம் சில வேளைகளில் கட்சி தாவல்களும் இடம்பெற கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பானவிவாதமும் இடம்பெறவுள்ளது. எனினும் சில வேளைகளில் இன்று பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும்சாத்தியம் உள்ளது. இதன்படி ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தைஒத்திவைக்க ஜனாதிபதியிடம் அனுமதி கோருமாறு பிரதமரிடம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள்தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment