சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை:
ஹக்கீம் அவர்கள்
கல்முனை மேடையில் அன்று அப்படி!
சாய்ந்தமருது மேடையில் இன்று இப்படி!!
முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர்
ரவூப் ஹக்கீம் அவர்கள் கடந்த
20 ஆம் திகதி
சனிக்கிழமை (2018.01.20) கல்முனையில் இடம்பெற்ற
பொதுக்கூட்டத்தில் சாய்ந்தமருது
மக்களின் தனியான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை தொடர்பாகபேசுகையில்,
“இன்னொரு
பிரதேசத்தைப் பகைத்துக் கொண்டு தங்களது அபிலாஷைகளை
அடையலாம் என்ற
கண் மூடித்தனமான
சிந்தனையை சாய்ந்தமருது
மக்கள் கைவிடல்
வேண்டும்‘ என்று
பேசியுள்ளார்.
நேற்று 3 ஆம் திகதி சனிக்கிழமை (2018.02.03) சாய்ந்தமருதில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் சாய்ந்தமருது மக்களின் உள்ளூராட்சி மன்றக்
கோரிக்கை தொடர்பாக,
“சாய்ந்தமருது மக்களின் விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டிய விருப்பம், புறந்தள்ள முடியாத விருப்பம். பூதாகரமாக வந்துள்ள இந்த விருப்பத்திற்கு எவருக்கும் பாதகமில்லாமல் ஒரு தீர்வைக் கொடுக்கின்ற நிலவரத்தைக் கொண்டு வரும்வரை பொறுத்திருக்க வேண்டும்.
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் கிடைக்கும் வரை
கல்முனை மாநகர சபையின் மேயர் பதவி சாய்ந்தமருது மண்ணுக்கே வழங்கப்படும் இதனை சாய்ந்தமருது
மண்ணில் வைத்து பிரகடனம் செய்கின்றேன்.
இந்தக் கட்சி இந்த மண்ணுக்கு மேயர் பதவியைக் கொடுத்து அலங்கரிக்கும். சாய்ந்தமருதுக்கு தனியான ஒரு பிரதேச சபை கிடைக்கும் வரை அந்த மேயர் பதவி தொடரும். இதனை யாராலும் தடுக்க முடியாது. இதற்கு பரிகாரம் இதுவாகத்தான் இருக்கும் என்றால் அதனையும் கொடுக்கத் தயாராக இருக்கின்றோம். என்று பேசியுள்ளார்.
அதுமாத்திரமலாமல் கல்முனை மாநகரத்தின் பெயரை கல்முனை – சாய்ந்தமருது மாநகரம் எனப் பெயரிட்டு மாற்றுவோம். சாய்ந்தமருதுக்கு
தனியான பிரதேச சபை கிடைக்கும் வரை சாய்ந்தமருதுக்கு வழங்கப்படும் மேயர் பதவி தொடரும்.
அதை யாராலும் தடுக்க முடியாது கல்முனையிலுள்ள யாரும் அதை எதிர்த்துப் பேச மாட்டார்கள்.
அதுவரை கல்முனை மாநகரம் கல்முனை - சாய்ந்தமருது
மாநகரம் என பெயர் மாற்றம் செய்யப்படும்.
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்குவதாக நான்
வாக்குறுதி வழங்கியிருக்கின்றேன். அந்த வாக்குறுதியை என்றைக்கும் மறந்து நான் செயல்பட்டதில்லை.
சாய்ந்தமருது மக்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதியில் ஒரு துளியேனும் நான் மாறவில்லை.
இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஏ.எல்ஜுனைதீன்
0 comments:
Post a Comment