ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் மூலம்
பாராளுமன்ற உறுப்பினராக
ஏ.எல்.எம். நசீர் சத்தியப்பிரமாணம்
கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த ஏ.எல்.முஹம்மட் நசீர் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்
பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
கடந்த
2015 பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியுடன்
செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் வழங்கப்பட்ட தேசியப்பட்டியல்
பதவி எம்.எச்.எம்.
சல்மானுக்கு வழங்கப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
உறுப்பினரான நசீர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின்
முன்னாள் தவிசாளர்
மற்றும் கிழக்கு
மாகாண சுகாதார
அமைச்சராக பதவிவகித்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த
தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் அட்டாளைச்சேனைக்கு
தேசியப்பட்டியல் தருவதாக வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக
குறித்த எம்.பி. பதவி
வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment