புதிய ஆயிரம் ரூபா ஞாபகார்த்த நாணயத்தாள்
இன்று சுற்றோட்டத்திற்கு விடப்பட்டது
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினவைபவத்தை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆயிரம் ரூபா ஞாபகார்த்த நாணயத்தாள் இன்று சுற்றோட்டத்திற்கு விடப்பட்டது.
ஆரம்பத்
தொடர் இலக்கங்களுடன்
கூடிய மட்டுப்படுத்தப்பட்ட
எண்ணிக்கையான நாணயத் தாள்கள் கவர்ச்சிகரமான மடிப்பொன்றில்
வைக்கப்பட்டு ஒவ்வொன்றும் ரூ.1,300 இற்கு இன்று
(06.02.2018) வழங்கப்பட்டது.
கவர்ச்சிகரமான மடிப்பொன்றில் வைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஆயிரம் ரூபா ஞாபகார்த்த நாணயத்தாள் 9ஆம் திகதி வரை
விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இல30, ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு
01 இல் அமைந்துள்ள இலங்கை மத்திய வங்கியின்
கருமபீடத்தில் இந்த
நாணயத் தாள்கள் காலை 9.00 மணி தொடக்கம்
பிற்பகல் 2.00 மணி வரை விற்பனை செய்யப்படும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாணயத்தாளின் முன் பக்கம்: சுதந்திரம் மற்றும் பல்லினத்தன்மையினைக்
கொண்டாடுவதனைக் குறிக்கும் இலச்சினை பழுப்பு நிறத்தில் மதங்களைப் பிரதிபலிக்கும்
நான்கு வழிபாட்டுத் தலங்கள். “இலங்கை சின்னக்கிளி“ எனும் பறவை..
இந்த நாணயத்தாளின் பின் பக்கம்: நிலைக்குத்தாகப்
பார்க்கும்போது “மல்பதய நெடும“ நடனக் கலைஞர் மற்றும் “தவுல் பெற“ மேளக்கார்.
பின்னனி – காவல் தெய்வத்துடன் சேர்ந்த காவல் கல் இரட்டை மலர் வடிவம் மற்றும்
இலங்கை தேசப்படம்.
புதிய
ஆயிரம் ரூபா
ஞாபகார்த்த நாணயத்தாளில் மூஸ்லிம் சமூகத்தை மதித்து சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் படம் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment