இன்று இடம்பெற்ற
புதிய அமைச்சரவை நியமனம்
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்ற
அமைச்சரவை மறுசீரமைப்புக்கு
அமைய 18 புதிய
அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒருசில
அமைச்சர்களுக்கு அவர்கள் வகித்த அமைச்சுப் பொறுப்புகளுக்கு
மேலதிகமாக மற்றுமொரு
அமைச்சுப் பதவி
வழங்கப்பட்டுள்ளதோடு, ஒருசில புதிய
அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்
18 அமைச்சுப் பொறுப்புக்களைத் தவிர, ஏற்கனவே அமைச்சுப்
பதவிகளை வகித்தவர்கள்
அதே பதவிகளை
வகிப்பார்கள் என அமைச்சர் கயந்த கருணாதிலக
தெரிவித்துள்ளார்.
புதிய
அமைச்சரவை விபரம்
1 . அமைச்சர் மனோ கணேசன் : தேசிய நல்லிணக்கம் மற்றும்
அரச கரும
மொழிகள்
2 . அமைச்சர் சாகல ரத்னாயக்க : திட்டமுகாமைத்துவம்
இளைஞர்கள் அலுவல்கள்
மற்றும் தென்மாகாண
அபிவிருத்தி
3. அமைச்சர் டிஎம் சுவாமிநாதன் : புனர்வாழ்வு
மீள்குடியமர்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து
அலுவல்கள் அமைச்சர்
4 . அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா :கடற்தொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமியபொருளாதார அபிவிருத்தி
5. அமைச்சர் பைசர் முஸ்தபா : விளையாட்டுதுறை
மாகாண சபைகள்
மற்றும் உள்ளுராட்சி
அமைச்சர்
6. அமைச்சர் தலதா அத்துக்கோளர : நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
7. அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார :
பொதுநிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் சட்டம் ஒழுங்கு
.
8. அமைச்சர் கபீர் ஹசீம் :
நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி
9. அமைச்சர் பீ.ஹரிசன் : சமூக வலுவூட்டல்
10. அமைச்சர் துமிந்த திசாநாயக்க : நீர்ப்பாசனம் நீர்வளங்கள் முகாமைத்துவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்
11. அமைச்சர் மகிந்த அமரவீர : விவசாயத்துறை
12. அமைச்சர் எஸ் பி நாவின்ன : உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி
13. அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம : விஞ்ஞானம் தொழில்நுட்பம் ஆய்வு திறன்அபிவிருத்தி , தொழிற்பயிற்சி மற்றும் மலையக பாரம்பரியம்
14. அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல : பொது நிறுவனங்கள் மற்றும் கண்டி அபிருத்தி
15. அமைச்சர் விஜயதாக ராஜபக்ஸ : உயர்கல்வி மற்றும் கலாச்சார அமைச்சர்
16. அமைச்சர் ரவீந்தர சமரவீர : தொழில்மற்றும் தொழிலாளர் உறவுகள்
17. அமைச்சர் சரத்பொன்சேகா : நிலைபேறான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு மற்றும் பிராந்திய அபிவிருத்தி
18. அமைச்சர் தயா கமகே : சமூக நலன்கள் மற்றும் ஆரம்பகைத்தொழில்
0 comments:
Post a Comment