2018.04.10 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவையில்
எடுக்கப்பட்ட முடிவுகள்
அமைச்சரவை தீர்மானங்கள்
01. இனங்காணப்பட்ட வைத்தியசாலைகளின் வசதிகளை விருத்தி செய்தல் (விடய இல. 07)
இனங்காணப்பட்ட வைத்தியசாலைகளின் வசதிகளை விருத்தி செய்யும் வேலைத்திட்டத்தினை துரித கதியில் செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தை கவனத்திற் கொண்டு, அம்முழு வேலைத்திட்டத்தின் மதிப்பீட்டு செலவில் 85% ஆன 72.25 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை ஹொங்கொங்கின் HSBC நிர்வனத்திடமிருந்தும், மேலதிக 15% ஆன 12.75 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை மக்கள் வங்கியிடமிருந்தும் பெற்றுக் கொள்வதற்காக கடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை பிரபல்யப்படுத்தல் (விடய இல. 09)
நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துக் கொள்வதற்காக அரச நிர்வனங்கள் பின்பற்ற வேண்டிய தேசிய செயன்முறைகளை தமது நிர்வன திட்டங்களினுள் உள்ளடக்கிக் கொள்ளுமாறு அனைத்து அரச நிர்வனங்களிடத்திலும் வேண்டிக் கொள்வது தொடர்பில் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் கௌரவ ரவிந்திர சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. புகையிலை உற்பத்திகளுக்கான ஏற்றுக் கொள்ளப்பட்ட (வர்ணமற்ற) பொதிகளை அறிமுகப்படுத்துதல் (விடய இல. 13)
இந்நாட்டில் விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து புகையிலை உற்பத்திகளுக்காகவும் 'ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதிகளை' அறிமுகப்படுத்துவதற்கு தேவையான சட்ட ரீதியான வீதிகளை அறிமுகப்படுத்தும் நோக்கில், 2006ம் ஆண்டு
27ம் இலக்க தேசிய புகையிலை மற்றும் மதுசார அதிகார சபை சட்டத்தினை திருத்தம் செய்தல் மற்றும் அச்சட்டத்தின் கீழ் விதிமுறைகளை விதிப்பதற்கு அவசியமான சட்டமூலத்தினை தயாரிக்குமாறு சட்டமாதிபர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் கௌரவ வைத்திய ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. ஆரம்ப சுகாதார சேவையினை பலப்படுத்துதல் (விடய இல. 14)
ஆரம்ப சுகாதார சேவையினை பலப்படுத்தும் நோக்கில் பின்வரும் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள 'பாரிய சுகாதார காப்புறுதியினை நோக்காகக் கொண்ட சுகாதார சிகிச்சையினை வழங்கும் கொள்கை' செயற்படுத்துவது தொடர்பில் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் கௌரவ வைத்திய ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
• மக்கள் தொகையில் 5,000 நபர்களை உள்ளடக்கும் வகையில், குடும்பத்துக்கு வைத்தியர் ஒருவரை இனங்கண்டு, வைத்திய சிகிச்சைக்காக வசதிகளை செய்து கொடுப்பதற்கு ஏதுவான வகையில் ஆரம்ப சிகிச்சை சேவையினை வழங்கும் நிர்வனங்களை மேலும் பலப்படுத்துதல்.
• குடும்ப வைத்தி சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு மற்றும் முதன்முறையாக சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக வருகை தருகின்ற நோயாளர்களுக்கு வழங்கப்படுகின்ற வைத்திய சேவையினை பலப்படுத்துவதற்கு தேவையான அடிப்படை பயிற்சிகளை வைத்தியர்களுக்கு வழங்குதல்.
• ஆரம்ப சிகிச்சை நிர்வனங்களின் மூலம் அனைத்து நோயாளர்களுக்கும் சிகிச்சை அளிப்பதனை உறுதிப்படுத்துதல் மற்றும் அந்நோயாளர்களை உரிய முறையில் உரிய வைத்தியசாலைகளில் அனுமதிப்பதனை பலப்படுத்துதல்.
• அனைத்து பிரஜைகளுக்கும் உரித்தாகின்ற சுகாதார துறையினை இனங்காணும் பிரிவுடன் கூடிய சுகாதார அறிக்கையொன்றினை வழங்குதல் மற்றும் சுகாதார தகவல்கள் முகாமைத்துவ பிரிவினை மேலும் பலப்படுத்துதல்.
• சுகாதார துறையில் மனித வளங்களை பலனுள்ள விதத்தில் இணைத்தல் மற்றும் பயன்படுத்துவதனை உறுதிப்படுத்துதல்.
• ஆரம்ப சிகிச்சையளிக்கின்ற வைத்தியர்களுடன் இணைந்து அவர்களின் மருத்துவ தகைமைகளை விருத்தி செய்வதற்காக விசேட வைத்தியர்களின் மூலம் நீடித்த சிகிச்சைகளை பெற்றுக் கொடுக்கும் முறையினை ஸ்தாபித்தல்.
05. மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரின துறைக்காக புதிய தேசிய கொள்கையொன்றை அறிமுகப்படுத்துதல் (விடய இல. 19)
மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரின துறைக்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய தேசிய கொள்கையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அவசியமான யோசனைகளை பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் இருந்து பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்றத்தில் முன்வைப்பது தொடர்பில் மீன்பிடி மற்றும் நீர் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. இலங்கையில் கலப்பு மற்றும் உள்ளக நீர்தேக்கங்களை அண்டிய நீர் சூழல் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி செய்வதன் ஊடாக நீர்வள உற்பத்திகளை விருத்தி செய்தல் (விடய இல. 20)
பல்வேறு நோக்கங்களை அடைந்துக் கொள்வதற்காக வேண்டி புத்தளம், நாயாறு, அருகம்பை, பானமை மற்றும் ரேகவ ஆகிய கலப்புகளுக்கு முன்னுரிமை வழங்கி 18 கலப்புகளுக்கும் மற்றும் ஈர வலயத்தின் நன்னீர் குளங்கள் 300இனை உள்ளடக்கும் வகையில் இவ்வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பில் மீன்பிடி மற்றும் நீர் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. காலநிலை மாற்றங்களுக்கு இசைவாக்கப்பட்டு விவசாய மற்றும் வடிகால் அபிவிருத்தி வேலைத்திட்டம் (2018-2024) (விடய இல. 22)
உலர் வலயங்களிலுள்ள 09 மாவட்டங்களிலும் பரந்து காணப்படுகின்ற 1,493 சிறிய குளங்கள் காலநிலை மாற்றத்துடனான ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளன. அதனடிப்படையில், அக்குளங்களின் கீழ் காணப்படுகின்ற பயிர் நிலங்களின் பலனை அதிகரிக்கும் நோக்கில் 2018 – 2024 காலப்பிரிவிற்குள் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவது தொடர்பில் கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08. அரச வெசாக் உற்சவம் - 2018 (விடய இல. 23)
2562ம் ஸ்ரீ பௌத்த வருடத்திற்கான அரச வெசாக் உற்சவம் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் குருநாகம் மாவட்டத்தின் பிங்கிரிய வரலாற்று முக்கியத்துவமிக்க தேவகிரி ரஜமஹாவிகாரையினை மையமாகக் கொண்டு இடம் பெறவுள்ளது. அதனடிப்படையில், 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் திகதி முதல் மே மாதம்
02ம் திகதி வரையான ஒரு வார காலத்தினை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தி கிரியைகளில் ஈடுபடுவதற்கும், அதனுடன் தொடர்புபட்ட மேலும் பல நிகழ்ச்சிகளை செயற்படுத்துவதற்கும் உத்தேசித்துள்ளதாக புத்தசாசன அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பேரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
09. கட்டுமான கைத்தொழில் அபிவிருத்தி (திருத்த) சட்டத்துக்கான யோசனைகள் (விடய இல. 30)
பல்வேறு தரப்பினரதும் யோசனைகளையும் பெற்று மற்றும் முன்னேற்றகரமான வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் 2014ம் ஆண்டு
33ம் இலக்க கட்டுமான கைத்தொழில் அபிவிருத்தி (திருத்த) சட்டத்துக்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. அச்சட்டமூலத்தினை அடிப்படையாகக் கொண்டு 2014ம் ஆண்டு
33ம் இலக்க கட்டுமான கைத்தொழில் அபிவிருத்தி சட்டத்தினை திருத்தம் செய்வதற்காக சட்ட மூலத்தினை தயாரிக்குமாறு சட்டமாதிபர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் வீடமைப்பு மற்றும் கட்டுமானத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
10. தொடர்மாடி உரிமைகள் (விசேட விதப்புரைகள்) சட்டமூலம் (விடய இல. 34)
பல்வேறு காரணங்களை கவனத்திற் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள தொடர்மாடி உரிமைகள் (விசேட விதப்புரைகள்) சட்டமூலத்தினை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் பாராளுமன்றத்தின் அனுமதிக்காக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்குமாக வீடமைப்பு மற்றும் கட்டுமானத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. இலங்கையில் பெற்றோலிய வள ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான செயற்பாட்டுத் திட்டம் (விடய இல. 35)
இலங்கையில் பெற்றோலிய வள ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான செயற்பாட்டுத் திட்டம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்பாடுகள் குறித்தான தகவல்கள் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கௌரவ அர்ஜுண ரணதுங்க அவர்களினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.
12. வாகனங்களின் புகை பரிசீலனை சான்றிதழினை வெளியிடுவதற்கான கொள்முதல் நடவடிக்கைகள் (விடய இல. 41)
வாகனங்களின் புகை பரிசீலனை சான்றிதழினை வெளியிடுவதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள கலந்துரையாடல் ஒப்புதல் குழுவின் சிபார்சின் பெயரில், M/s Laugfs Eco Sri
(Pvt) Ltd., M/s Cleanco Lanka (Pvt) Ltd. மற்றும் M/s Auto Test
Lanka (Pvt) Ltd. ஆகிய நிர்வனங்களுக்கு வழங்குவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. தோட்ட பாடசாலைகளை விருத்தி செய்வதற்காக கம்பனிகளின் கீழ் நிர்வகிக்கப்படுகின்ற அரச தோட்டங்களின் காணிகளை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 49)
07 மாவட்டங்களில் அமைந்துள்ள, தற்போது மட்டுப்படுத்தப்பட்ட பூமிப்பகுதியில் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற 354 தோட்டப்புற பாடசாலைகளுக்காக 02 ஏக்கர் காணியளவினை உயர்ந்த பட்சமாகக் கொண்ட தோட்ட கம்பனிகளிடத்தில் இருந்து காணிகளை விடுவித்துக் கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்கள், அரச வியாபார மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ லக்ஷ்மன் கிரியெல்ல அவர்கள் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர் கௌரவ நவின் திசாநாயக்க ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. 2018ம் ஆண்டு மார்ச் மாத ஆரம்ப காலப்பகுதியில் கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய பிரதேசங்களை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு சலுகையளித்தல் (விடய இல. 50)
2018ம் ஆண்டு மார்ச் மாத ஆரம்ப காலப்பகுதியில் கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய பிரதேசங்களை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் விளைவால் உயிரிழந்த மூன்று நபர்களுக்காகவும், ஒருவருக்கு 500,000 ரூபா வீதம் அவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈட்டு தொகையினை பெற்றுக் கொடுப்பதற்கும், குறித்த சம்பவங்களின் போது காயமடைந்த நபர்களுக்காக, வைத்திய அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு 250,000 ரூபா உட்பட்டு நட்டஈட்டு தொகையினை பெற்றுக் கொடுப்பதற்கும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்நிர்மானம், மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment