ஒரு இலட்சத்துக்கு அதிக வருமானம்
பெறுவோருக்கான அறிவித்தல்


ஒரு இலட்சத்துக்கும் அதிகமாக வருமானம் பெறும் ஊழியர்களிடம் இருந்து வருமான வரியாக 4,000 ரூபாய் அறவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய தேசிய வருமான வரிச் சட்டத்தின் கீழ், ஊழியர்களின் சம்பளத்துக்கான வருமான வரி அறவிடப்படும் முறையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
மாதம் ஒரு இலட்சத்துக்கும் குறைவாக வருமானம் பெறும் ஊழியர்களிடம் இருந்து வருமான வரி அறவிடப்படமாட்டாது.

மாத வருமானம்   வரி வீதம்
100,000                வரி இல்லை
100,000 – 150,000      4%
150,000 – 200,000     8%
200,000 – 250,000    12%
250,000 – 300,000    16%
300,000 – 350,000    20%
350,000 க்கு மேல்   24%

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top