தோல்வியும் வெற்றி தான்
பிரேரணை தோல்வி குறித்து
மஹிந்த ராஜபக்ஸ தெரிவிப்பு


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தாலும், தமக்கு வெற்றியே என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு முடிந்த பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஸ,

சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், முடிவு மாறியிருக்கும்.

முதலில் எமக்கு 54 வாக்குகள் தான் இருந்தன. இப்போது, 76 வாக்குகளாக அதிகரித்துள்ளது. இது எமக்கு வெற்றி தான்என்று அவர் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top