பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு
எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை
இறுதி சமரச முயற்சி இன்று
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நாளை நடைபெறவுள்ள நிலையில் இது தொடர்பாக சமரசத்தை ஏற்படுத்தி ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கான இறுதிச் சந்திப்பொன்றை இன்று காலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடத்தவிருக்கிறார்.
அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று காலை ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தில் இரண்டு தரப்பினரும் எவ்வாறு சமரசமான முறையில் இணக்கப்பாட்டிற்கு வர முடியும் என்பது குறித்து ஆராயப்படவிருக்கிறது.
0 comments:
Post a Comment