கூட்டு அரசு தொடரும்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு
தற்போதைய
கூட்டு அரசாங்கம்
தொடரும் என்று
பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு
நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான
வாக்கெடுப்பு தோற்கடிக்கப்பட்டதை அடுத்து,
கருத்து வெளியிட்ட
போதே அவர்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
”கூட்டு
அரசாங்கத்தின் சில உறுப்பினர்களை நாம் இழந்திருக்கிறோம்.
ஆனால்,
எஞ்சியுள்ள உறுப்பினர்களுடன் தற்போதைய கூட்டு அரசாங்கம் தொடர்ந்து
முன்னெடுக்கப்படும்.
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என பிரதமர் மேலும் தெரிவித்தார்
நம்பிக்கையில்லா பிரேரணையில் எமக்கு எதிராக வாக்களித்தவர்களின் உதவியின்றி ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுத்தச் செல்வோம்.
இது தொடர்பாக நாளை அல்லது நாளை மறுதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியை எவ்வாறு கொண்ட செல்வது என்று தீர்மானம் எடுக்கப்படும்.
அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சியில் மறுசீரமைப்பு மேற்கொண்டு கட்சியை பலமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
0 comments:
Post a Comment