‘ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கத் தயார்’
கோத்தாபய ராஜபக்ஸ தெரிவிப்பு
ஜனாதிபதி தேர்தலில்
போட்டியிடத் தயார் என்றும், அதற்காக அமெரிக்க
குடியுரிமையைக் கைவிடுவேன் என்றும் முன்னாள் பாதுகாப்புச்
செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு, ஜனாதிபதி தேர்தல்
குறித்து அளித்துள்ள
செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக
நீங்கள்
தெரிவு
செய்யப்படவுள்ளதாக
பேசப்படுகிறது. ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவது
பற்றி
யாரேனும்,
உங்களை
அணுகினார்களா?
இல்லை.
ஆனால் பேசப்படுகிறது.
அதுபற்றி முடிவு
செய்வதற்கு இன்னமும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்றன
என்று நான்
நினைக்கிறேன். அது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவைப் பொறுத்த விடயம்.
மிகச் சிறந்த
வேட்பாளர் என்று
அவரே முடிவு
செய்வார். வெற்றி
பெறக் கூடிய- பொருத்தமான
வேட்பாளர் யார்
என்பது அவருக்குத்
தெரியும்.
தற்போதைய சூழ்நிலையில், அந்த வகிபாகம் குறித்து என்ன
நினைக்கிறீர்கள்?
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை விட,
வேட்பாளராவதற்கு பொருத்தமானவர் வேறு எவரும் இல்லை.
மக்கள் ஆதரவையும்,
பிரபலத்தையும், தற்போதைய
சூழ்நிலையில் தேவைப்படும் தலைமைத்துவத்தை
வழங்கக் கூடிய
ஆற்றலையும் கொண்டுள்ளவர் அவர். அவர் அனுபவம்
மிக்கவர்.
19 ஆவது
அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தினால், துரதிஷ்டவசமாக,
அவர் ஜனாதிபதி
வேட்பாளராக போட்டியிட முடியாது. அவரது ஆதரவைப்
பெற்ற எவரேனும்
ஒருவரால் தான்
வெற்றி பெற
முடியும்.
உங்களை வேட்பாளராகத் தெரிவு
செய்தால்,
அந்தச்
சவாலை
எதிர்கொள்வதற்கு,
நீங்கள்
தயாரா?
அவர்
அவ்வாறு நினைத்தால்,
நான் போட்டியிடுவேன்.
அதற்காக முன்வருவேன்.
போட்டியிடுவதற்கான ஆற்றல் எனக்கு
இருப்பதாக நான்
நினைக்கிறேன்.
அமெரிக்காவில் குடியுரிமையைக்
கொண்டுள்ளதால்,
இரட்டைக்
குடியுரிமை
உங்களுக்குத்
தடையாக
இருக்கிறது.
இதனை
எப்படி
தீர்க்கப்
போகிறீர்களா?
19 ஆவது
திருத்தச் சட்டத்தினால்
இப்போது என்னால்
போட்டியிட முடியாது.
இருந்தாலும், முன்னாள் ஜனாதிபதி என்னை வேட்பாளராகத்
தெரிவு செய்தால்,
இரட்டைக் குடியுரிமையை
கைவிடும் செயல்முறை
செல்ல வேண்டும்.
அதற்கான
செயல்முறைகள் என்ன?
அது
என்னைப் பொறுத்த
விடயம். அதற்கான
செயல்முறை உள்ளது.
அது தெளிவான-
குறுகிய நடைமுறை
தான்.
0 comments:
Post a Comment