ஐதேக வேட்பாளரை அறிவித்த பின்னரே
தமது வேட்பாளரை அறிவிப்பாராம் மஹிந்த


ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பின்னரே, தமது தரப்பு வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என்று முன்னாள் ஜனாதிபதியும் எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள சுருக்கமான செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

சமல் ராஜபக்ஸவும், கோத்தாபய ராஜபக்ஸவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், உங்களின் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று மஹிந்த ராஜபக்ஸவிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது,

அதற்கு அவர், ”நாங்கள் இன்னமும் முடிவு செய்யவில்லை. நாங்கள் காத்திருக்கிறோம். ஒவ்வொருவதும் பரப்புரை செய்ய முடியும். நிச்சயமாக நாங்கள், வெற்றிபெறக் கூடிய ஒருவரையே வேட்பாளராக தெரிவு செய்வோம்.” என்று கூறியுள்ளார்.

வேட்பாளர் யார் என்று கட்சி எப்போது முடிவு செய்யும் என்றும், எப்போது அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர், ”ஐக்கிய தேசியக் கட்சி தமது வேட்பாளரை அறிவித்த பின்னரே, நாம் அதனை அறிவிப்போம்என்றும் பதிலளித்துள்ளார் மஹிந்த ராஜபக்ஸ.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top