ரணில் விக்ரமசிங்கவின் சுயசரிதை சீன மொழியில்
பிரதமர் ரணிலிடம் கையளிக்கப்பட்டது

சீன மொழியில் எழுதப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சுயசரிதை, அலரி மாளிகையில் இன்று பிரதமர் ரணிலிடம் கையளிக்கப்பட்டது.

சம்பத் பண்டார எழுதிய ரணில் விக்ரமசிங்கவின் சுயசரிதையை பேராசிரியர் வங் யூ மற்றும் பேராசிரியர் ஹெங் ஷிங்சன் ஆகியோர் சீன மொழியில் மொழிப் பெயர்த்துள்ளனர்.

பெய்ஜிங் ஹெங்ஷி அச்சம் மற்றும் இலங்கையின் சரசவி அச்சகம் ஆகியன இணைந்து இந்த நூலை வெளியிட்டுள்ளன.

இலங்கையின் அரச தலைவர் ஒருவரது விபரமான சுயசரிதை சீன மொழியில் வெளியிடப்பட்டமை இதுவே முதல் முறையாகும்.

இந்த சுயசரிதை நூல் சீனாவில் உள்ள அனைத்து புத்தக விற்பனை நிலையங்கள் மற்றும் நூலகங்கள் மூலம் மக்களிடம் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என பெய்ஜிங் ஹெங்ஷி வெளியீட்டு நிறுவனத்தின் பிரதிநிதி ஐவோய் தெரிவித்துள்ளார்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top