24 மணிநேரத்துக்கு
மிக கனமழை
வளிமண்டலவியல்
திணைக்களம் எச்சரிக்கை
பெரும்பாலான
பகுதிகளில் இன்று 150 மி.மீ இற்கும்
அதிகமான மிககனமழை
எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்
இன்று அதிகாலை
எச்சரித்துள்ளது.
வடக்கு,
வடமத்திய, மத்திய,
சப்ரகமுவ, வடமேல்,
மேல் மாகாணங்களிலும்,
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும், இன்று கடுமையான
மழை பொழியும்
என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
24 மணிநேரத்துக்குள்
150 மி.மீற்றருக்கும்
அதிகமான மழை
வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
மின்னல்
தாக்கத்தில் இருந்து பாதிப்புகளை தவிர்க்க தேவையான
முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல்
திணைக்களம் எச்சரித்துள்ளது.
நாட்டில்
தற்பொழுது நிலவும்
மழையுடன் கூடிய
காலநிலை எதிர்வரும்
சிலதினங்கள் தொடரும் சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல்
திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய
, சப்ரகமுவ , மேற்கு ,ஊவா ,வடக்கு மற்றும்
தென் மாகாணங்களிலும்
அம்பாறை மட்டக்களப்பு
மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சியும், ஏனைனய சில
பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சியும் 24
மணித்தியாளங்களில் பதிவாகக்கூடும் .
கடும்
காற்றின் காரணமாக
கடற்பிரதேசம் கொந்தளிப்புடன் காணப்படும்.
கடற்றொழிலாளர் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர்
அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல்
திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இடியுடன்
கூடிய மழையின்போது
பலத்த காற்றுவீசக்கூடும்.
இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக
செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
0 comments:
Post a Comment