ஜனாதிபதி வாக்குறுதியளித்தவாறு
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி
கட்டிடத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை
கல்முனை
மஹ்மூத் மகளிர்
வித்தியாலயத்தின் கட்டிட தேவைகளை பூர்த்தி செய்து
தருவதாக ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன அவ்வித்தியாலய மாணவிகளுக்கு அளித்த
வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லையென பாடசாலைப்
பெற்றோரும், மாணவர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
களுவாஞ்சிக்குடி
ஆதார வைத்தியசாலை
கட்டிடத் தொகுதியை
திறந்து வைப்பதற்காக
இந்த வருடம்
பெப்ரவரி மாதம்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சமூகமளித்தபோது
கல்முனை மஹ்மூத்
மகளிர் கல்லூரிக்கும்
திடீர் விஜயம்
ஒன்றை அமைச்சர்
தயா கமகே
மற்றும் கல்முனைத்தொகுதி
ஐ.தே.க அமைப்பாளர்
சட்டத்தரணி எம்.எஸ்.றஸாக் ஆகியோரின்
அழைப்பின் பேரில்
மேற்கொண்டார்.
அதன்போது
பாடசாலை மாணவிகள்
கூட்ட மண்டபம்,
தொழில்நுட்பபீடம், மனையியல் கூடம்,
நவீன பாடசாலை
பற்சுகாதார நிலையம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தபோது
இவற்றை உடனடியாக
நிறைவேற்றுமாறு கல்வி அமைச்சு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஆயினும் இக்கோரிக்கைகள்
எதுவும் இதுவரை
நிறைவேற்றப்படவில்லைஎன தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை
மாவட்டத்தில் எந்தவொரு அபிவிருத்தி வேலையும் தமக்கூடாகவே
நடைபெற வேண்டுமெனவும்
அவற்றை தாமே
திறந்து வைக்க
வேண்டுமெனவும் விரும்பும் அதிகாரத்தில் உள்ள கட்சியினர்
ஜனாதிபதியின் உத்தரவை அமுல்படுத்துவதிலும்
தடையாக உள்ளனரா
என மக்கள்
பேசிக் கொள்கின்றனர்.
இதேவேளை
இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் ஏ.எச்.ஏ.பஷீர்
அவர்களுக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம்
நடத்தப்பட்ட பிரிவுபசார வைபவத்தில் கலந்து கொண்ட
கிழக்கு மாகாண
முதலமைச்சர் இப்பாடசாலைக்கு மூன்று மாடி வகுப்பறைக்
கட்டிடத்தை தருவதாக வாக்களித்திருந்தார்.
இதுவும் நிறைவேற்றப்படவில்லை.
ஆனால்,
அண்மையில் ஜனாதிபதி
நுவரெலியாவுக்கு ஹெலிகொப்டரில் சென்று கொண்டிருந்த போது
ஹற்றனில் உள்ள
பிரபல பாடசாலை
மைதானத்தில் தரையிறக்க வேண்டியேற்பட்டது.
அதன்போது மாணவிகளுடன்
அளவளாவிய போது
மாணவிகள் பல
கோரிக்கைகளை ஜனாதிபதிக்கு முன்வைத்தனர்.
அக்கோரிக்கைகள்
நிறைவேற்றப்பட்டமை குறித்து அப்பாடசாலை
மாணவிகள் ஜனாதிபதியின்
வாசஸ்தலத்திற்கு சென்று நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment