இந்தியாவில் நடைபெறும் பெளத்த கலாசார மாநாட்டில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த.!
இந்திய மகராஷ்டிரா
மாநிலத்தில் அமைந்துள்ள
ஆருங்காபாத் நகரில் இன்று
ஆரம்பமாகும் பெளத்த
கலாசார மாநாட்டில் முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸ விசேட உரையாற்றவுள்ளார்.
குறித்த
விஜயத்தின்போது
அரசியல் தலைவர்களுடனான உத்தியோகபூர்வ
சந்திப்புகள் ஏற்பாடாகாத
போதும் தனிப்பட்ட சந்திப்புகள் இடம்பெறலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக
மற்றும் கலாசாரம் தொடர்பான சர்வதேச பெளத்த சம்மேளனத்தின்
இரண்டாம் மாநாடு மகராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஆருங்காபாத் நகரில் இன்றும்
நாளையும் நடைபெறவுள்ளது. பெளத்த
மரபுரிமைகள்
மற்றும் கலாசாரம் தொடர்பில்
உலகைத் தெளிவுபடுத்துவதே
இம்மாநாட்டின் தொனிப்பொருளாக
அமைந்துள்ளது.
எனவே,
அம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸ நேற்றுக் காலை 5.30 மணியளவில்
கட்டுநாயக்க
விமான நிலையத்தினூடாக இந்தியா பயணமானர். அவருடன்
முன்னாள் வெளிவிவகார அமைச்சரும்
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் லொஹான ரத்வத்த, முன்னாள் ஜனாதிபதியின்
பிரத்தியேகச் செயலாளர் உதித்த லொக்குபண்டார உட்பட
12 பேர் கொண்ட குழுவினர் இந்தியா
பயணமாகியுள்ளனர்.
0 comments:
Post a Comment