மர்ஹும் அஷ்ரப் அவர்களின் பிரார்த்தனை போன்று
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களிடமும்
எதிர்பார்த்து காத்திருக்கும் சாய்ந்தமருது மக்கள்!
அன்று சாய்ந்தமருது மக்களின் கோரிக்கைகளில் ஒன்றான சாய்ந்தமருது மக்களுக்கான தனியான பிரதேச செயலகத்தை உருவாக்கிவிட்டு மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள்,
“எல்லாப்புகழும் இறைவனுக்கே!
சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால அபிலாஷையாக விடுத்த பிரதேச செயலகக் கோரிக்கை இன்று வெற்றி பெறுகின்றது. அதிகாரப் பரவலாக்கல் நடைபெறும் இன்றைய கால கட்டத்தில் இன்று இக்கிராமம் பெறவிருக்கின்ற புதிய அதிகாரம் புதிய யுகத்தை நோக்கி நம்மை தயார் செய்யும் பணியில் பெரிதும் உதவிடப் பிரார்த்திப்போம்!
ஒப்பம்
எம்.எச்.எம்.அஷ்ரப்
19.12.1999
இவ்வாறு எழுதி பிரார்த்தித்தது போன்று இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்கிவிட்டு இவ்வூர் மக்களுக்காகப் பிரார்த்திக்க வேண்டும் என சாய்ந்தமருது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை கட்சியின்
தனித்தலைவராகப் பிரகடணப்படுத்திய ஊர் சாய்ந்தமருது என்பதை தலைவர் ரவூப் ஹக்கீம் ஒரு
போதும் மறந்து செயல்படக்கூடாது என்றும் இவ்வூர் மக்கள் நினைவுபடுத்துகின்றார்கள்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.