ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
– கட்டார் பிரதமர் சந்திப்பு
இரண்டு
நாள் அரச
முறை பயணம்
மேற்கொண்டு கட்டார் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன மற்றும்
கட்டார் பிரதமர்
அப்துல்லாஹ் பின் நசர் கலீபா அல்
தானிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றது.
டோஹா
நகரில் இலங்கை
ஜனாதிபதி தங்கியுள்ள ஹோட்டலுக்கு
இன்று முற்பகல்
வருகைதந்த கட்டார்
பிரதமர் ஜனாதிபதியை
சந்தித்தார்.
இலங்கை ஜனாதிபதியின் இந்த
விஜயம் கட்டார்
நாட்டுக்கு பெரும் கௌரவமாகும் எனக் குறிப்பிட்ட
கட்டார் பிரதமர்,
இரண்டு நாடுகளுக்கு
இடையிலான ஒத்துழைப்பை
மேலும் பலப்படுத்த
இது பெரிதும்
உதவும் என்றும்
குறிப்பிட்டார்.
கட்டார்
– இலங்கை இருதரப்பு
உறவுகளை எதிர்காலத்தில்
பல்வேறு துறைகளில்
பலமாக முன்னெடுப்பது
குறித்து தலைவர்கள்
இதன்போது விரிவாக
கலந்துரையாடினர்.
மின்சாரம்
மற்றும் சக்தி
வளத் துறையில்
உள்ள முதலீட்டு
சந்தர்ப்பங்கள் குறித்து ஜனாதிபதி கட்டார் பிரதமருக்கு
விளக்கினார்.
சர்வதேச
மட்டத்தில் இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புகளுக்கும் கட்டாரில் பல்வேறு துறைகளில் தொழில்புரியும்
இலங்கையர்களுக்கு வழங்கும் ஒத்துழைப்புகளுக்கும்
ஜனாதிபதி கட்டார்
பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.
இவ்விஜயத்தின்
போது கைச்சாத்திடப்படும்
புதிய புரிந்துணர்வு
ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான
பொருளாதார, வர்த்தக மற்றும் தொழில்நுட்ப துறை
ஒத்துழைப்புகளை மேலும் மேம்படுத்த உதவும் என்றும்
ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நவீன
தொழில்நுட்பத்துடன் இன்று முழு
உலகமும் இணைந்துள்ள
நிலையில், உலகின்
அனைத்து நாடுகளுக்கும்
இடையில் ஒத்துழைப்பை
அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டியதன்
அவசியத்தை ஜனாதிபதி
வலியுறுத்தினார்.
இலங்கைக்கு
விஜயம் செய்யுமாறு
ஜனாதிபதி; கட்டார்
நாட்டின் பிரதமருக்கு
அழைப்பு விடுத்தார்.
தான் இலங்கைக்கு
விஜயம் செய்ய
எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்ட கட்டார்
பிரதமர், இரு
நாடுகளுக்கிடையிலான உறவை மேலும்
பலப்படுத்த அது மேலும் உதவும் என்றும்
குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.