இனக்கலவரத்தை ஏற்படுத்துவோர் மீது
கடுமையான நடவடிக்கை
மட்டக்களப்பில்
இனக்கலவரத்தை ஏற்படுத்த முனைவோர் கைது செய்யப்படுவதோடு,
அவர்கள் மீது
கடுமையான நடவடிக்கை
எடுக்கப்படும் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்
சமன் யட்டவர
தெரிவித்துள்ளார்.
நேற்று
நண்பகல் பாதுகாப்பு
அதிகாரிகளின் தெளிவுப்படுத்தல் கூட்டம் நடைபெற்றறது.
இதில்
கலந்து கொண்டு
மட்டக்களப்பின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் தெளிவுப்படுத்திய
போதே அவர்
இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கூறுகையில்,
தமிழர்
பகுதிக்கு முஸ்லிம்கள்
வரக்கூடாதென்றோ, முஸ்லிம்களின் பகுதிக்கு தமிழர்கள் செல்லக்
கூடாதென்றோ இயல்பு வாழ்க்கையைக் குழப்பும் நடவடிக்கையில்
எவரும் ஈடுபட்டால்
அது சட்டவிரோதமானதாகும்.
அத்தகையவர்கள்
உடனடியாகக் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும். மாவட்டத்திலுள்ள சகல பொலிஸ் நிலையங்களும்
பொதுமக்களின் பாதுகாப்பையும் இயல்பு வாழ்க்கையையும் பாதுகாக்கும்
வண்ணம் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
மேற்கொண்டு
எந்த வன்முறைகளும்
இந்த மாவட்டத்தில்
இடம்பெறாத வண்ணம்
எமது பொலிஸார்
நடவடிக்கையை மேற்கொண்டு உன்னிப்பாக அவதானித்த வண்ணம்
உள்ளார்கள் என தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.