அரசியலமைப்பு சபையின் பாராளுமன்ற விவாதம் இன்று
அரசியல் யாப்பின் நடவடிக்கைக் குழுவின் அறிக்கை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று காலை 10.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த விவாதம் செவ்வாய் மற்றும் புதன்கிழமையும் தொடர்ந்து இடம்பெறவுள்ளது. விவாதத்தின் பின்னர் இது தொடபிலான பொதுமக்களின் கருத்துக்களைக் கண்டறிவதற்கான பணி ஆரம்பமாகும்.
நடவடிக்கைக் குழுவின் இடைக்கால அறிக்கை அரசியல் யாப்புப் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டமை இதன் கீழ் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை சம்பிரதாயபூர்வமாக முதலாவது யாப்புப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்ற நடைமுறைக்கே என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இதன் பின்னர் நடவடிக்கை குழுவின் அறிக்கை குறித்து மஹாநாயக்க தேரர்கள் நாட்டின் பொதுமக்கள் வரையிலான அனைத்துத் தரப்பினரும் கருத்துக்களை, ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய, மஹாநாயக்க தேரர்களுக்கு பேராயர்கள் தலைமையிலான கத்தோலிக்க சபை, மதத் தலைவர்கள் அரசியல் கட்சித் தலைவர்கள், சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களும் கேட்டறியப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment