கடனை வாங்கியவர்கள் ஏமாற்றியதால்

மூன்று குழந்தைகளுடன் தாய் தற்கொலை



ஒரு கோடியே 17 லட்சம் ரூபா பணத்தை வாங்கியவர்கள் ஏமாற்றியதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பொட்டாசியம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் யாழ்.நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உட்பட தனது சிறிய தாயாருக்கும், தனது குடும்பத்தினருக்கும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தானும் நஞ்சருந்தி தனது குழந்தைகளுக்கும் கொடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

யாழ்.அரியாலை .வி.வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று (27) வெள்ளிக்கிழமை இந்த தற்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிரிசாந்தன் சுனேந்திரா தாய் மற்றும் அவரது பிள்ளைகளான கிரிசாந்தன் சர்சா(வயது 4) கிரிசாந்தன் சஜித் (வயது 2) கிரிசாந்தன் சரவணா (வயது 2) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கணவர் நகைக்கடை வேலை செய்பவர். கடந்த ஓகஸ்ட் மாதம் அவர் தற்கொலை செய்துள்ளார்.

தற்கொலை செய்த குடும்பத்தினர், தமது குடும்ப நண்பர்களுக்கு நட்பின் அடிப்படையில் ஒரு கோடியே 17 லட்சம் ரூபா கடன் கொடுத்துள்ளனர். 6 மாத கால தவணையில் மீளத் தருவதாக கூறியிருந்தும் மீளக்கொடுக்கவில்லை. வீட்டிற்கு சென்று கேட்ட போது, காசு வாங்கியவரின் உறவினரை வெளிநாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

மூத்த சகோதரனிடம் கேட்ட போது, 10 லட்சம் ரூபா தானே நான் தர வேண்டும். 'நீ செய்வதை செய்' என்று பதிலளித்துள்ளார். பணம் பெற்றுக்கொண்டவரின் மனைவியிடம் கேட்ட போது, “நான் பொறுப்பு நின்றதற்கு என்ன ஆதாரம் உள்ளது.

திரும்ப வாங்கிப் பார்என்று கூறியுள்ளார். இதனையடுத்து யாழ். நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கில் தனக்கு சாதகமான நிலை இல்லை என்பதை அறிந்த நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி யாழ்.நீதிமன்றில் நடைபெற்ற வழக்கிற்கு சென்று வந்த கணவர் கிரிசாந்தன் தாம் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். கணவர் முதலில் நஞ்சருந்தியுள்ளார்.

கணவர் துடி துடித்ததை கண்டவர் கணவனை காப்பாற்ற முயற்சித்தமையினால் தான் நஞ்சருந்தும் எண்ணத்தை மனைவி கைவிட்டுள்ளார்.

கணவர் இறந்துபோன விரக்தியின் காரணமாக நேற்றைய தினம் கடிதம் எழுதி வைத்துவிட்டு மூன்று குழந்தைகளுடன் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என அவரின் சிறிய தாயார் தெரிவித்தார்.

கணவர் தற்கொலை செய்து கொண்டதால் இவர்களும் ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் மிகவும் பாதுகாப்பாக பார்த்து வந்ததாக தெரிவித்த சிறிய தாயார் தாய் மற்றும் 3 பிள்ளைகளும் வீட்டில் தமது அறைக்குள்ளேயே இருந்து வந்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற நேற்றைய தினம் சிறு பிள்ளைகள் அறையிலிருந்து வெளியே வந்தபோது வாய்க்குள் இருந்து நுரை தள்ளியதை கண்டதாகவும் ஏன் நுரை வருகின்றதென தேடி பார்த்த போது நஞ்சருந்தியிருப்பதை தெரிந்து கொண்டேன் என உயிரிழந்த பெண்ணின் சிறிய தாயார் தெரிவித்தார்.

வீட்டில் இருந்த மேசையின் மீது கடித உறைக்குள் இட்டவாறு 3 கடிதங்களையும் உறவினர்கள் எடுத்துள்ளனர்.

அதில் தனது நிலைமைகள் குறித்தும் அந்த கடிதத்தில் விபரித்துள்ளார்.


அந்த கடிதங்கள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மற்றும் தற்கொலை செய்து கொண்டவரின் சிறிய தாயார் உட்பட தனது பெற்றோருக்குமாக எழுதி வைக்கப்பட்டுள்ளன. சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸாரால் விசாரணைகள் முடுக்கி விடுக்கப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top