அன்று சாய்ந்தமருதில் அப்படி!
கல்முனையில் இன்று இப்படி!!
பிரதி அமைச்சர் ஹரீஸின் சொல் நாணயம்?
அன்று சாய்ந்தமருதில்
சாய்ந்தமருது
மக்களின் கோரிக்கையை
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் நிறைவேற்றித்தருவதாக
வாக்களித்து, அதற்கான பல்வேறுபட்ட முன்னெடுப்புக்களை மேற்கொண்டதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்தும்
வாக்குறுதியை பெற்றுக்கொடுத்ததாகவும் அமைச்சர்
றவூப் ஹக்கிம்
தலைமையில் பலசந்தர்ப்பங்களில்
சாய்ந்தமருது உள்ளுராட்சிசபை விடயமாக சம்மந்தப்பட்ட அமைச்சர்களுக்கு
பல்வேறு அழுத்தங்களைக்
கொடுத்து வருவதாகவும்
தற்போது அதற்க்கான
காலம் கணிந்துள்ளதாகவும்
கூடிய விரைவில்
சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிசபை பிரகடனப்படுத்தப்படும்
என்றும் பிரதி
அமைச்சர் ஹரீஸ்
தெரிவித்தார்.
சுயதொழிலுக்கான
உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச
செயலகத்தில் பிரதேச செயலாளர் ஐ. எம்.ஹனிபா
தலைமையில் 2017-08-12 ஆம் திகதி
இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதி
அமைச்சர் மேற்கண்டவாறு
தெரிவித்திருந்தார்.
சாய்ந்தமருது
உள்ளுராட்சிசபை விடயத்தில் தன்னை சிலர் பிழையாக
நோக்குவதாகவும் தான் அந்த விடயத்தில் மிகுந்த
இறை அச்சத்துடன்
செயற்படுவதாகவும் பள்ளிவாசலில் வைத்தே வாக்குறுதியளித்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இன்று கல்முனையில்
சாய்ந்தமருதிலுள்ள 18000 வாக்காளர்கள் இன்று என்னை ஒரு துரோகியாக பார்க்கின்றனர். அதனைக்கூட பொறுப்படுத்தாது சாய்ந்தமருதை தனியாக பிரிக்காமல் கல்முனை மாநகரினை நான்கு சபைகளாக பிரிக்கச் சொல்லியுள்ளோம்
- கல்முனையில் ஹரீஸ்
0 comments:
Post a Comment