தேசிய பாடசாலைகளில்
9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஜனவரியில் இடமாற்றம்
தேசிய பாடசாலைகளில், ஒரே பாடசாலையில் சுமார் 10 வருடங்களுக்கும் மேல் சேவை செய்த மேலும் 9 ஆயிரம் ஆசிரியர்கள் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இடமாற்றம் பெறுவர் என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கவனம் செலுத்தியுள்ளார்.
நாடளாவிய ரீதியிலுள்ள 353 தேசிய பாடசாலைகளில், சுமார் 37 ஆயிரம் ஆசிரியர்கள் சேவையாற்றி வருகின்றனர். இவர்களில் 12 ஆயிரம் பேர் ஒரே பாடசாலையில், சுமார் 10 வருடங்களுக்கும் மேல் சேவையாற்றியுள்ளனர். இவ்வாறான ஆசிரியர்களில் சுமார் 3 ஆயிரம் பேர் ஒக்டோபர் 12 முதல் வேறு தேசிய பாடசாலைகளுக்கு, கல்வி அமைச்சினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
எஞ்சியுள்ள சுமார் 9 ஆயிரம் ஆசிரியர்கள் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். அரசின் தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கைக்கமைவாக, ஆசிரியர் இடமாற்ற சபையின் உதவியுடன் மாகாண மட்டத்தில் இப்பணி முன்னெடுக்கப்படவுள்ளது.
தேசிய பாடசாலைகளில் சுமார் 10 வருடங்களுக்கும் மேல் ஒரே பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்களை இடமாற்றும் தேசிய திட்டத்தின் கீழ், ஒரு தொகுதி ஆசிரியர்கள் கடந்த 2013ஆம் ஆண்டு, கல்வி அமைச்சினால் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதன்பின்னர், இவ்வருடம் சுமார் 3 ஆயிரம் ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுள்ளனர். இடமாற்றம் பெற்ற ஆசிரியர்கள் புதிய இடமாற்றப் பாடசாலைகளில் கடமையேற்று, அதுகுறித்து அமைச்சுக்கு அறிக்கை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஆசிரியர்கள் மாத்திரமன்றி,
10 வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசலையில் சேவையாற்றும் தேசிய பாடசாலை அதிபர்களும் ஏனைய பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
காலி றிச்மன்ட் கல்லூரியில இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றுகையிலேயே
இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
கல்வி கட்டமைப்பின் சிறப்பான செயற்பாட்டிற்காக சரியான தீர்மானங்களை மேற்கொள்வதில் தாம் எந்த வகையிலும் பின்னிற்கப் போவதில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.