அமெரிக்காவின் (Nimitz ) போர் கப்பல் கொழும்பில்
அமெரிக்காவின்
(The Nimitz Carrier Strike Group) போர் கப்பல்
கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ளது.
விமானங்களைக்
கொண்டு தாக்குதல்
நடவடிக்கையில் ஈடுபடும் USS Nimitz, the
cruiser USS Princeton, and destroyers USS Howard, USS Shoup, USS Pinckney, and
USS Kidd குழவினரும் இதில் இடம்பெற்றுள்ளனர். இவ்வாறான கப்பல் ஒன்று இலங்கைக்கு
1985 ஆம் ஆண்டு
வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த
கப்பல் இம்மாதம்
31 ஆம் திகதி
வரையில் இலங்கையில்
இருக்கும். இந்த கப்பல் 333 மீற்றர் நீளத்தைக்
கொண்டதாகும். ஐயாயிரம் கடற்படையினர் தங்கக்கூடிய வசதிகளை
கொண்டதாகும். இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படைக்கிடையில்
தொடர்புகளை மேம்படுத்துவதே இந்த குழவினரின் வருகை
உறுதி செய்வதாக
அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம்
இலங்கைக்கு சுமார் 150 கோடி ரூபா பொருளாதார
ரீதியில் நன்மை
கிடைக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment